இந்தியா முழுவதும் தேடினாலும் இப்படி ஒரு வீரர் கிடைக்கவே மாட்டார்; இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர் !! 1

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பயமே இல்லாத மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரித்வி ஷாவை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியா இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் ஷனாகா 39 ரன்களும், அஸ்லன்கா 38 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கருணாரத்னேன் 43* ரன்களும் எடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 262 ரன்கள் குவித்தது.

இந்தியா முழுவதும் தேடினாலும் இப்படி ஒரு வீரர் கிடைக்கவே மாட்டார்; இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர் !! 2

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், தீபக் சாஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இலங்கை அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்த ப்ரித்வி ஷா 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த அறிமுக வீரரான இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்துவிட்டு 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இந்தியா முழுவதும் தேடினாலும் இப்படி ஒரு வீரர் கிடைக்கவே மாட்டார்; இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர் !! 3

இதன்பின் வந்த மணிஷ் பாண்டே 26 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் நங்கூரமாக நிலைத்து நின்று இலங்கை அணியின் பந்துவீச்சை இறுதி வரை அசால்டாக எதிர்கொண்ட ஷிகர் தவான் 95 பந்துகளில் 86* ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 36.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பயமே இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்த ப்ரித்வி ஷா ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும் பெற்றுள்ளார். முன்னாள் வீரர்களும் ப்ரித்வி ஷாவை வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் தேடினாலும் இப்படி ஒரு வீரர் கிடைக்கவே மாட்டார்; இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர் !! 4

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவும் தன் பங்கிற்கு ப்ரித்வி ஷாவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “ப்ரித்வி ஷா களத்திற்கு வருவதற்கு முன்பு, இலங்கையின் கையே ஓங்கி இருந்தது போன்றிருந்தது. ஆனால் ப்ரித்வி ஷா களத்திற்கு வந்தார், போட்டியை தலைகீழாக மாற்றிவிட்டார். நான் ப்ரித்வி ஷாவின் மிகப்பெரும் ரசிகனாகிவிட்டேன். இந்தியா முழுவதும் தேடினாலும் இப்படிப்பட்ட வீரர் கிடைக்க மாட்டார். சேவாக்கை போன்றே ப்ரித்வி ஷாவும் விளையாடி வருகிறார். ப்ரித்வி ஷா அடித்த பவுண்டர்களில் அதிர்ஷ்டத்தால் கிடைத்தவை அல்ல, ஒவ்வொரு ஷாட்டையும் சரியான திசையை தேர்வு செய்தே அடித்தார். இந்த வருடம் ப்ரித்வி ஷாவிற்கானது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *