இவர ஏன் எடுக்கல...? இந்த டீம வச்சிக்கிட்டு ஜெயிக்கிறதே ரொம்ப கஷ்டம் ; இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !! 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து முகமது ஷமி புறக்கணிக்கப்பட்டது ஏன் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

இவர ஏன் எடுக்கல...? இந்த டீம வச்சிக்கிட்டு ஜெயிக்கிறதே ரொம்ப கஷ்டம் ; இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !! 2

அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது சரியானது தான் என்றாலும், சீனியர் வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு சமூக வலைதளங்களில் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என ஓபனாக பேசி வருகின்றனர், அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்தான தங்களது கருத்துக்களையும்க் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவர ஏன் எடுக்கல...? இந்த டீம வச்சிக்கிட்டு ஜெயிக்கிறதே ரொம்ப கஷ்டம் ; இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !! 3

அந்தவகையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா, முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “சீனியர் வீரரான முகமது ஷமிக்கு அணியில் இடம் கொடுக்காது ஏன்..? ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள துபாய் ஆடுகளங்கள் செப்டம்பர் மாதத்தில் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமானதாக இருக்கும். ஆனால், இந்திய அணியோ வெறும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் துபாய் செல்கிறது, இந்திய அணியின் இந்த முடிவு தவறானது என்றே கருதுகிறேன். கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆசிய கோப்பை தொடர் முடியும் வரை ஆடுகளத்தின் தன்மை வேகப்பந்து வீச்சிற்கே சாதகமானதாக இருக்கும், ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை நாம் ஐபிஎல் தொடரிலேயே பார்த்துள்ளோம். முகமது ஷமியை விட ஆவேஸ் கானிற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்..? முகமது ஷமியின் அனுபவம் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை மட்டுமே சேர்க்கும்” என்று தெரிவித்தார்.

இவர ஏன் எடுக்கல...? இந்த டீம வச்சிக்கிட்டு ஜெயிக்கிறதே ரொம்ப கஷ்டம் ; இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !! 4

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான்.

ஸ்டாண்ட்பை வீரர்கள்;

ஸ்ரேயஸ் ஐயர், அக்‌ஷர் பட்டேல், தீபக் சாஹர்.

Leave a comment

Your email address will not be published.