எந்த காரணமும் இல்லாமல் கேதர் ஜாதவிற்கு ஏன் அணியில் இடம்..? ஹைதராபாத் அணியை விளாசும் முன்னாள் வீரர் !! 1

ஒரு போட்டியில் கூட ஒழுங்காக விளையாடாத கேதர் ஜாதவிற்கு ஹைதராபாத் அணி தொடர்ந்து ஆடும் லெவனில் இடம் கொடுப்பது ஏன் என முன்னாள் வீரர் சேன் பொல்லாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

எந்த காரணமும் இல்லாமல் கேதர் ஜாதவிற்கு ஏன் அணியில் இடம்..? ஹைதராபாத் அணியை விளாசும் முன்னாள் வீரர் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் ஐடன் மார்க்ரம் (27) மற்றும் கே.எல் ராகுல் (21) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் (2) முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சனும் (1) வந்த வேகத்தில் வெளியேறினார்.

எந்த காரணமும் இல்லாமல் கேதர் ஜாதவிற்கு ஏன் அணியில் இடம்..? ஹைதராபாத் அணியை விளாசும் முன்னாள் வீரர் !! 3

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து திருப்புமுனையை ஏற்படுத்தியதன் மூலம் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரில் ஹைதராபாத் அணியால் 11 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால், பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

எந்த காரணமும் இல்லாமல் கேதர் ஜாதவிற்கு ஏன் அணியில் இடம்..? ஹைதராபாத் அணியை விளாசும் முன்னாள் வீரர் !! 4

பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் 8வது தோல்வியை பதிவு செய்துள்ள ஹைதரபாத் அணியை, அந்த அணியின் ரசிகர்களே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஹைதராபாத் அணியின் தொடர் தோல்விகள் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் வீரரான சேன் பொல்லாக், தொடர்ந்து சொதப்பும் கேதர் ஜாதவிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்த காரணமும் இல்லாமல் கேதர் ஜாதவிற்கு ஏன் அணியில் இடம்..? ஹைதராபாத் அணியை விளாசும் முன்னாள் வீரர் !! 5

இது குறித்து சேன் பொல்லாக் பேசுகையில், “ஹைதராபாத் அணியின் முக்கிய வீரரான டேவிட் வார்னர், ஒரு போட்டியில் சொதப்பினால் மற்றொரு போட்டியில் சிறப்பாக விளையாடிவிடுவார். மணிஷ் பாண்டே பெரிதாக ரன் குவிப்பது இல்லை என்றாலும் மிடில் ஆர்டருக்கு சற்று வலு சேர்க்கிறார். ஆனால் கேதர் ஜாதவிற்கு ஆடும் லெவனில் தொடர்ந்து இடம் கிடைப்பது எப்படி என்று தான் புரியவில்லை. ஒரு போட்டியில் கூட அவர் சரியாக விளையாடுவதில்லை. தொடர்ந்து ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் அளவிற்கு கேதர் ஜாதவ் எப்போது விளையாடினார் என்றும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

எந்த காரணமும் இல்லாமல் கேதர் ஜாதவிற்கு ஏன் அணியில் இடம்..? ஹைதராபாத் அணியை விளாசும் முன்னாள் வீரர் !! 6

சீனியர் வீரர்களில் ஒருவரான கேதர் ஜாதவ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள 6 போட்டிகளில் மொத்தம் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *