ஐ பி எல் நீங்கள் அடித்த 175 ரன்கள் ரெக்கார்டை எவரால் முறியடிக்க முடியும் என்று கிறிஸ் கெயிலிடம் கேட்கப்பட்டது அதற்கு சிறப்பான பதிலை கொடுத்திருக்கிறார் கிரிஸ் கெயில்.

டி20 போட்டிகளில் வானவேடிக்கை காட்டுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில். இவருக்கு யுனிவர்சல் பாஸ் என்று இன்னொரு பெயரும் உண்டு. ஏனெனில் உலகில் நடக்கும் பல்வேறு டி20 லீகில் பங்கேற்று, அதில் பல சாதனைகளை படைத்து ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார் என்பதால் இத்தகைய பெயரை பெற்றார். 

என்னோட 175 ரன்கள் ரெக்கார்டை முறியடிக்க ஒருத்தன் பொறந்துட்டான்... அது இந்தியன் டீம்ல இருக்க ஒருத்தரால தான் முடியும் - கிறிஸ் கெயில் நம்பிக்கையான பேச்சு! 1

14 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இவர் எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கிறார். சர்வசாதாரணமாக சதங்கள் அடிக்கக்கூடிய இவர், 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக வெறும் 30 பந்துகளில் சதம் விலாசி, போட்டி முடிவில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உட்பட 66 பந்துகளில் 175 ரன்கள் அடித்து சர்வதேச டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். 

தற்போது வரை இந்த சாதனையை முறியடிக்க எவரும் இல்லை என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. இந்நிலையில் 10 ஆண்டுகளாக முறியடிக்க முடியாமல் இருக்கும் இந்த சாதனையை யார் மூடி இருப்பார்? மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மறக்க முடியாத நிகழ்வு எது? என்று கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு சிறப்பான பதிலை கொடுத்திருக்கிறார் கிறிஸ் கெயில்.

என்னோட 175 ரன்கள் ரெக்கார்டை முறியடிக்க ஒருத்தன் பொறந்துட்டான்... அது இந்தியன் டீம்ல இருக்க ஒருத்தரால தான் முடியும் - கிறிஸ் கெயில் நம்பிக்கையான பேச்சு! 2

“இத்தனை ஆண்டுகள் நான் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் என்னால் மறக்க முடியாத ஒன்று.. நான் வைத்த ரெக்கார்ட் 175 ரன்கள்… எனது நினைவுகளில் முதல் இடத்தில் அது இருக்கிறது.” மேலும், இந்த ரெக்கார்டை முறியடிக்க யாரால் முடியும்? என்று கேட்டதற்கு, கே எல் ராகுல் என்று தனது பதிலை தயக்கமின்றி கூறி இருக்கிறார். இருவரும் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளில் இணைந்து விளையாடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னோட 175 ரன்கள் ரெக்கார்டை முறியடிக்க ஒருத்தன் பொறந்துட்டான்... அது இந்தியன் டீம்ல இருக்க ஒருத்தரால தான் முடியும் - கிறிஸ் கெயில் நம்பிக்கையான பேச்சு! 3

கிறிஸ் கெயில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளுக்கு கமென்டரி செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வருகிறது. இதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *