#RCB: கொரானாவால் பாதிக்கப்பட்ட இவரது இடத்தை நிரப்புவது யார் ? இந்த 3 பேருக்கு அதிக வாய்ப்பு ! 1

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு டேனியல் சாம்ஸ் விலகி இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவருக்கு பதிலாக யார் இடம் பெற போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2008 முதல் தற்போது வரை இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சிஎஸ்கே அணி 3 முறையும் கோப்பைகளை தட்டிச் சென்றுள்ளது.

தேவ்தத் படிக்கல்லை அடுத்து மற்றொரு ஆர்சிபி வீரருக்கு கொரானா தொற்று உறுதி ! 2

இந்தாண்டு நடைபெறும் 14வது சீசன் வருகின்ற ஏப்ரல் 9 முதல் மே 30 வரை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்தாண்டு எந்தொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாட முடியாது என்று அதிரடி முடிவை அறிவித்துள்ளனர். ஏப்ரல் 9 நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது.

இதற்காக ஆர்சிபி வீரர்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதித்து வருகின்றனர். இது ஐபிஎல் ரசிகர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

#RCB: கொரானாவால் பாதிக்கப்பட்ட இவரது இடத்தை நிரப்புவது யார் ? இந்த 3 பேருக்கு அதிக வாய்ப்பு ! 2

இதில் ஆர்சிபி வீரர்களும் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக படிக்கல் சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இது மிகப்பெரிய இழப்பாக இருந்தது.

தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.  இவருக்கு அறிகுறிகள் இல்லாத நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது இவர் தனிமையில் இருப்பதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.  ஏற்கெனவே  தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இவருக்கும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் ஆர்சிபி ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் இருக்கின்றனர். 

#RCB: கொரானாவால் பாதிக்கப்பட்ட இவரது இடத்தை நிரப்புவது யார் ? இந்த 3 பேருக்கு அதிக வாய்ப்பு ! 3

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு டேனியல் சாம்ஸ் விலகி இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவருக்கு பதிலாக யார் இடம் பெற போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது இடத்திற்கு  நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் மற்றும்  ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரில்  ஒருவர் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

#RCB: கொரானாவால் பாதிக்கப்பட்ட இவரது இடத்தை நிரப்புவது யார் ? இந்த 3 பேருக்கு அதிக வாய்ப்பு ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *