திடீரென இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் நடராஜன்; டி.20 உலகக்கோப்பையில் இடம் கிடைக்குமா..? 1

இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரரான நடராஜனின் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த தொடர் ஜூலை 13ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திடீரென இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் நடராஜன்; டி.20 உலகக்கோப்பையில் இடம் கிடைக்குமா..? 2

இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., இன்று அறிவித்தது. இந்த தொடருக்கான இந்திய அணி20யில் சேத்தன் சக்காரியா, தேவ்தட் படிக்கல், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும், டி.20 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜனின் பெயர் அணியில் இடம்பெறாதது கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

திடீரென இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் நடராஜன்; டி.20 உலகக்கோப்பையில் இடம் கிடைக்குமா..? 3

டி.20 உலகக்கோப்பை அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தற்போது திடீரென நடராஜன் அணியில் இருந்து புறக்கணிக்கப்படுவது அவர் டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

டி20 உலகக் கோப்பை எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அணியை தேர்வு செய்வதில் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் பெரும் பங்கு வகிக்கும். இதில் நடராஜன் இடம்பெறாததால், அவர் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு குறைவு என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

திடீரென இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் நடராஜன்; டி.20 உலகக்கோப்பையில் இடம் கிடைக்குமா..? 4
CANBERRA, AUSTRALIA – DECEMBER 02: Thangarasu Natarajan of India celebrates dismissing Marnus Labuschagne of Australia during game three of the One Day International series between Australia and India at Manuka Oval on December 02, 2020 in Canberra, Australia. (Photo by Cameron Spencer – CA/Cricket Australia via Getty Images)

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் அறிமுகமாகி, தனது அதிரடி பௌலிங் மூலம் உலக அளவில் பிரபலமானார் நடராஜன். அதனைத் தொடர்ந்து அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இவரால் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க முடியவில்லை. தொடர்ந்து ஐபிஎல் தொடரின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது, மீண்டும் முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டார். இதனால், தொடரில் பாதியிலேயே வெளியேறிய அவர், அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடருக்கான இந்திய அணி;

ஷிகர் தவான் (கேப்டன்), ப்ரித்வி ஷா, தேவ்தட் படிக்கல், ருத்துராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கவுதம், க்ரூணல் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சனி, சேட்டன் சக்காரியா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *