விலகும் ரோஹித் சர்மா..? அடுத்த போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

காயம் காரணமாக மூன்றாவது டி.20 போட்டியில் இருந்து பாதியில் வெளியேறிய ரோஹித் சர்மா, நான்காவது டி.20 போட்டியில் விளையாடாவிட்டால் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, விண்டீஸ் அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

விலகும் ரோஹித் சர்மா..? அடுத்த போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் விண்டீஸ் அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி 2ம் தேதி நடைபெற்றது.

இந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா போட்டியின் போது காயமடைந்து பாதியில் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விலகும் ரோஹித் சர்மா..? அடுத்த போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 3

முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக ரோஹித் சர்மா பாதியில் வெளியேறும் நிலை ஏற்பட்டதாக பிசிசிஐ., அறிவித்திருந்தது. போட்டி முடிந்தபிறகு பேசிய ரோஹித் சர்மாவும், வலி குறைந்துவிட்டதாகவும் அடுத்த போட்டிக்கு முன் முழுமையாக காயம் சரியாகிவிடும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

காயத்தில் இருந்து ரோஹித் சர்மா முழுமையாக குணமடைந்தாலும், ஆசிய கோப்பை தொடரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ரோஹித் சர்மா விண்டீஸ் அணியுடனான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது.

விலகும் ரோஹித் சர்மா..? அடுத்த போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 4

ஒருவேளை ரோஹித் சர்மா விண்டீஸ் அணியுடனான நடப்பு டி.20 தொடரில் இருந்து விலகும் பட்சத்தில், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

ரிஷப் பண்ட் ;

சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட், கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

விலகும் ரோஹித் சர்மா..? அடுத்த போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 5

 

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.