அடுத்த,

அடுத்த, 10 ஆண்டுகளுக்கு ஆடுவேன் : கோஹ்லி

இந்திய அணியின் கேப்ட விராத் கோலி கடந்த சில வருட்ங்களாக அசுர ஃபார்மில் உள்ளார். இப்படி இருந்து அவரையும் விட்டு வைக்கவில்லை ஊடகங்கள். அவரிடமும் பொய் நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியை முன்வைத்துள்ளன. அடுத்த,

தற்போது விராத் கோலிக்கு 29 வயதாகிறது. 19 வயதிலிருந்து சீனியர் அணிக்காக ஆடி வருகிறார் சாதனை மன்னன் விராத் கோலி.

அதற்க்கு முன்னர் தனது 16 வயதில் முதல் தர போட்டிக்காக தந்தையின் இரங்கள் நிகழ்ச்சிக்குக் கூட செல்லாமல் அறிமுகமாகி ஆடியுள்ளார் விராத்.

பின்னர் தனது 19 வயதில் இந்திய 19 வய்திற்க்குட்பட்டோருக்கான அணியில் கேப்டனாக இருந்து உலகக்கோப்பயை பெற்றுத் தந்துள்ளார் விராத்.

தற்போது, முன்னாள் ஜாம்பவான் சச்சின் வைத்துச் சென்ற பல்வேறு சாதனைகளை அதிவேகமாக தக்ர்த்து வருகிறார் விராத் கோலி.

அவரிடம் ஓய்வு குறித்து முன்வைக்கப் பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்,

தற்போது என்னுடைய 70 சதவீத திறமையுடம் ஆடி வருகிறேன். அதனை 100 சதவீதமாக ஆக்க முயற்ச்சித்து வருகிறேன். என்னவாயினும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா அணிக்காக விளையாட விரும்புகிறேன்.

எனக் கூறியுள்ளார்.

டி20 போட்டியில் அபாரமாக ஆடி ஆட்டநாயகன் விருது வென்ற கோஹ்லி, சர்வதேச டி20 போட்டி சேஸிங்கில் 1016 ரன்களுடன் அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் நியூசிலாந்தின் மெக்கல்லமை (1006) முந்தி சாதனை படைத்தார்.

கடந்த 10 போட்டியில் கோஹ்லி 598 ரன்

(82, 82*, 55*, 41*, 56*, 49, 50, 72*, 57*, 54) விளாசி உள்ளார்.

மேலும், டி20 போட்டியில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவை (6,872 ரன்) முந்தி, கோஹ்லி (6,907) முதலிடத்தை பிடித்தார்.

உலக அளவில் இப்பட்டியலில் அவர் 8வது இடத்தில் உள்ளார்.

இலங்கையில் இந்தியா 9-0 , வரலாற்றுச் சாதனை

 இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒரு தொடரில் 3 வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா, இலங்கையில் இந்தியா 9-0 , வரலாற்றுச் சாதனை ஆஸ்திரேலியாவை சமன் செய்துள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலும் வென்றதன் மூலம் இச்சுற்றுப்பயணத்தில் 9 போட்டிகளையும் முழுமையாக வென்று இந்திய அணி மகத்தான சாதனை படைத்துள்ளது.

இலங்கையில்

கோப்பை வென்ற கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இந்திய அணி முழுமையாக வென்றது.

முழுமையாக ஒயிட் வாஷ் செய்யப்பட்ட சுற்றுப்பயணத்தில், அதிக வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையை ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது.

இதற்கு முன், 2009-10ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி இதே போல 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 போட்டிகளை முழுமையாக வென்று சாதித்தது.

இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுகிறது. இலங்கையில்

வரும் 17ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது.

இலங்கையை முழுமையாக ஒயிட்வாஷ் செய்தது குறித்து இந்திய கேப்டன் கோஹ்லி கூறுகையில்,

‘‘அனைத்து போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது மிகவும் சிறப்பானது. இதை திட்டமிட்டு செய்யவில்லை.

 

இந்த பாராட்டு எல்லாம் சக வீரர்களை தான் சேரும். அணியில் உள்ள 15 பேரும் நல்ல நிலையில் இருப்பதால் வலிமை பெற்றுள்ளோம். இதனால், முடிவுகள் அற்புதமாக இருக்கிறது.

 

எனது ஆட்டம் நல்ல நிலையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து வடிவிலான போட்டியிலும் எனது ஆட்டம் சிறப்பாக இருக்கவே விரும்புகிறேன்’’ என்றார். • SHARE
 • விவரம் காண

  வீடியோ: கொலவெறி பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர்!

  தனுஷ் பாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலக அளவில்...

  “என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்” – கிறிஸ் கெயில் வருத்தம்!

  "என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்" - கிறிஸ் கெயில் வருத்தம்! கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் என்னை போன்றவர்கள் மீது இன வெறுப்பை காட்டியுள்ளார்கள் என...

  சொந்த அணியில் இடமில்லாததால்.. இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு!

  இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு! சொந்தநாட்டு அணியான இங்கிலாந்தில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால், உலகக்கோப்பையை வென்ற...

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? – பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்!

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? - பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்! இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில்...

  கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. – கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு!

  கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. - கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு! விராத் கோலியை கண்டால் எனக்கு சற்றும் பயமில்லை...