Cricket, Women's World Cup, India, England, Mithali Raj

தற்போது இங்கிலாந்தில் மகளிருக்கான உலகக்கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் விளையாடியது. இங்கிலாந்தை 246- ரன் மட்டுமே அடிக்க விட்டு 36-ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது இந்திய அணி.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் விளையாட சொன்னது. அதை பயன்படுத்தி கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர் முடிவில் 281/3 ரன் எடுத்தது. இதனால், சேசிங் செய்ய இங்கிலாந்து அணி திணறியது.

அங்கிருந்த வானிலை இங்கிலாந்து பந்துவீச்சாளராகளுக்கு உதவி செய்ய வில்லை. 20 வயது ஸ்மிர்த்தி மந்தானா, பூனம் ரவுட்டுடன் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 144 ரன் சேர்த்து அடுத்து வரும் வீராங்கனைக்கு உதவி செய்தனர்.

முதல் இன்னிங்சில் இருவரும் சிறப்பாக விளையாடினர். 26.2 வது ஓவரில் 144-ரன் இருக்கும் போது இந்த ஜோடி பிரிந்தது.மந்தனா சதம் அடிக்க 10 ரன்கள் மட்டுமே தேவை பட்ட நிலையில், மிட்-விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் கேப்டன் மித்தாலி ராஜ், பூனம் ரவுட்டுடன் ஜோடி சேர்ந்தார்.

பூனம் அரைசதம் அடிக்க, பூனம் – மித்தாலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 122 ரன் சேர்தது. 43வது ஓவரில் பூனம் 86-ரன்னில் இருக்க, இரண்டாவது ஜோடி பிரிந்தது. அடுத்து 73 பந்துகளில் 71 ரன் அடித்திருந்த கேப்டன் மித்தாலி ராஜும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். ஒருநாள் போட்டியில் 7வது தொடர் அரைசதத்தை அடித்தார் மித்தாலி ராஜ்.

50 ஓவரில் 281 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மகளிர் இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 246 ரன்னுக்கு சுருந்தது.

சுருக்கமான ஸ்கோர்:

இந்தியா 281/3 (50) [மந்தனா 90, ஹெதர் நைட் 2/41]

இங்கிலாந்து 246/10 (47.3) [பிரான் வில்சன் 81, தீப்தி சர்மா 3/47]

***

பிரிஸ்டன் மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து. ஹோலி ஹட்ட்லேஸ்டோன் 35 ரன் கொடுத்து 5 விக்கெட் எடுத்ததால், இலங்கை அணியால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் 141/1 என்ற நிலையில் இலங்கை அணி இருந்தது, ஆனால் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தது.

189 ரன் சேஸ் பண்ணுவது கடினமல்ல, இந்த சேஸிங்கின் போது நியூஸிலாந்து வீராங்கனை சதம் அடித்து அசத்தனார். இதனால், நியூஸிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது.

சுருக்கமான ஸ்கோர்:

இலங்கை 188/9 (50) [சமாரி அட்டபட்டு 53, ஹோலி ஹட்ட்லேஸ்டோன் 5/35]

நியூஸிலாந்து 189/1 [சுஜி பேட்ஸ் 106, சந்திமா குணரத்னே 1/20]

 

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *