ஸ்டோக்ஸின் போராட்டம் வீண்; அசத்தலாக அரையிறுதியில் கால் பதித்தது ஆஸ்திரேலியா !! 1

ஸ்டோக்ஸின் போராட்டம் வீண்; அசத்தலாக அரையிறுதியில் கால் பதித்தது ஆஸ்திரேலியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.

கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளாக பார்க்கப்பட்டு வரும் இரு அணிகள் இடையேயான இந்த கிரிக்கெட் போர், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஸ்டோக்ஸின் போராட்டம் வீண்; அசத்தலாக அரையிறுதியில் கால் பதித்தது ஆஸ்திரேலியா !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் 53 ரன்களும், ஆரோன் பின்ச் 100 ரன்களும் எடுத்து மிகச்சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து வந்த வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித் (38) மற்றும் அலெக்ஸ் கேரி (38*) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 285 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணியால் இந்த இலக்கை மிக இலகுவாக எட்ட முடியும் என்பதே ஒட்டுமொத்த கிரிக்கெட் விமர்ச்சகர்களின் கருத்தாக பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான வின்ஸ் டக் அவுட்டாகி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கணிப்பையும் தவிடுபொடியாக்கினார்.

ஸ்டோக்ஸின் போராட்டம் வீண்; அசத்தலாக அரையிறுதியில் கால் பதித்தது ஆஸ்திரேலியா !! 3

அடுத்தடுத்த களமிறங்கிய வீரர்களில் ஸ்டோக்ஸை (89) மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்தில் வெளியேறியதால் 44.4 ஓவர்களில் வெறும் 220 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இங்கிலாந்து அணியுடனான இந்த அசத்தல் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி அசத்தலாக பந்துவீசிய ஜேசன் பெஹண்ட்ரூஃப் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *