டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இவர்தான் ட்ரம்ப் கார்ட்: பார்த்தீவ் பட்டேல் வெளிப்படை 1

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்தீவ் பட்டேல் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முகமது ஷமி நிச்சயமாக இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுப்பார் என்ற தற்போது கூறியிருக்கிறார். மேலும் புஜாரா இந்திய அணியின் வெற்றியை உறுதி படுத்துவார் என்றும் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டில் முகமது ஷமி கண்டிப்பாக அசத்துவார்

முகமது ஷமி 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். ஆனால் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக மிக சிறப்பாக முகமது ஷமி செயல்பட்டார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இவர்தான் ட்ரம்ப் கார்ட்: பார்த்தீவ் பட்டேல் வெளிப்படை 2

2018 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் மொத்தமாக 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். அவருக்கு இங்கிலாந்து மைதானங்கள் புதிதல்ல. எந்த நேரத்தில் எந்த வகையான பந்துகளை வீச வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா நன்றாக வீசினாலும் என்னை பொருத்தவரையில் முகமது ஷமி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு முக்கிய வீரராக காணப்படுவார் என்று கூறியிருக்கிறார்.

புஜாரா நீண்ட நேரம் விளையாடினால் இந்திய அணி வெற்றி நிச்சயம்

மேலும் பேசிய அவர் நிச்சயமாக இந்திய அணி நிர்வாகம் புஜாராவை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும். இந்திய அணி வெகு சீக்கிரமாக தங்களது 2 – 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து விடக்கூடாது. புஜாரா சற்று நிதானமாக விளையாட கூடிய ஒரு வீரர்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இவர்தான் ட்ரம்ப் கார்ட்: பார்த்தீவ் பட்டேல் வெளிப்படை 3

என்னைப் பொருத்தவரையில் அவரை மூன்றாவது இடத்தில் விளையாட விட்டால் நிச்சயம் 5 முதல் 6 மணி நேரம் இந்திய அணிக்காக நிதானமாக செயல்படுவார். அந்த நேரத்தில் எதிர் முனையில் இருக்கும் வீரர் விரைந்து ஸ்கோர் செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே புஜாரவை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இரு அணியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்ட கேள்விக்கு நிச்சயமாக இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். பலம் வாய்ந்த அணியாக இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நிச்சயமாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *