கோலி, ரோஹித் எல்லாம் கிடையாது; நியூசிலாந்து அணியை வச்சு செய்ய போவது இவர் தான்; முன்னாள் வீரர் உறுதி !! 1

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் ரிஷப் பண்ட் மிக முக்கிய பங்கு வகிப்பார் என முன்னாள் வீரர் கிரன் மோர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சவுதாம்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

கோலி, ரோஹித் எல்லாம் கிடையாது; நியூசிலாந்து அணியை வச்சு செய்ய போவது இவர் தான்; முன்னாள் வீரர் உறுதி !! 2

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக பயிற்சியும் எடுத்து வருகின்றனர். அதே போல் மறுபுறம் கிட்டத்தட்ட டி.20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இணையாக பார்க்கப்படும் இந்த இறுதி போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர், அதே போல் இறுதி போட்டிக்கான தங்களது ஆடும் லெவனையும், கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோலி, ரோஹித் எல்லாம் கிடையாது; நியூசிலாந்து அணியை வச்சு செய்ய போவது இவர் தான்; முன்னாள் வீரர் உறுதி !! 3
India’s captain Virat Kohli (L) is bowled LBW by New Zealand’s Tim Southee (R) on day one of the second Test cricket match between New Zealand and India at the Hagley Oval in Christchurch on February 29, 2020. (Photo by PETER PARKS / AFP)

அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரன் மோர், இறுதி போட்டியில் ரிஷப் பண்ட் மிக முக்கிய பங்கு வகிப்பார் என தெரிவித்துள்ளார்.

கோலி, ரோஹித் எல்லாம் கிடையாது; நியூசிலாந்து அணியை வச்சு செய்ய போவது இவர் தான்; முன்னாள் வீரர் உறுதி !! 4

இது குறித்து கிரன் மோர் பேசுகையில், “கடந்த சில போட்டிகளை போலவே டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியிலும் ரிஷப் பண்ட்டின் பங்கு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறேன். டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு பிறகு நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரிஷப் பண்ட்டே மிக முக்கிய பங்கு வகிப்பார். சமீபகாலமாக மிக சிறந்த பார்மில் உள்ளார் ரிஷப் பண்ட், எந்த இடத்தில் களமிறங்கினாலும் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை ரிஷப் பண்ட்டிற்கு கிடைத்துவிட்டது என்று கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், மாயன்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *