Cricket, India A, Rahul Dravid, WV Raman

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்கவீரர் டபுள்யூ.வி.ராமன் 19 வயதுக்கு உட்பட்டோர்கான இந்திய அணியுடன் 19 வயதுக்கு உட்பட்டோர்கான இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு செல்கிறார்.

முன்னதாக ஜூனியர் இந்திய அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர்க்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் நீடிக்கப்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனால் தென்னாப்ரிக்காவுடன் முத்தரப்பு தொடர் விளையாட ஜூனியர் இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் தென்னாபிரிக்கா செல்ல உள்ளார். இதனால், U19 இந்திய கிரிக்கெட் அணியுடன் அவரால் இருக்க முடியாது.இதனால், அவருக்கு பதிலாக U19 இந்திய வீரர்களுக்கு ராமன் பயிற்சியளிப்பார். இந்நிலையில், ராகுல் டிராவிட் இல்லாததால்,U19 அணியுடன் ராமன் தான் இங்கிலாந்துக்கு செல்வார்.

“அனைத்து வீரர்களையும் அவருக்கு தெரியும். அவர்களுடன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் வேலை செய்தார். ராகுல் ட்ராவிட்டுடன் அவருக்கு பழக்கம் உண்டு, இதனால் இந்த பதவிக்கு அவர்தான் சரியான ஆள். U19 இந்திய அணியின் வீரர்களின் செயல்கள் எப்படி இருக்கிறது என்று எனக்கு அறிவித்து கொண்டே இருக்க வேண்டும் என வாரியத்திற்கு ராகுல் டிராவிட் கூறினார், என பிசிசிஐ தெரிவித்தது.

குயின்ஸ் பார்க் மைதானத்தில் ஜூன் 23ஆம் தேதி அன்று நடக்க போகும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணி மோதவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 3ஆம் தேதி நடக்க உள்ளது. இதன் பிறகு ஐந்து ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளது.

இன்னொரு பக்கம் தென்னாப்ரிக்காவிற்கு சென்று முத்தரப்பு தொடர் மற்றும் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் ஜூனியர் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த டூருக்கு மனிஷ் பாண்டே மற்றும் கருண் நாயர் ஆகியோர் கேப்டனாக இருப்பார்கள்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *