82 வருட சாதனையை அசால்டாக முறியடித்து வரலாறு படைத்த யாசிர் ஷா

அபு தாபி டெஸ்டில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியதன் மூலம் 33 இன்னிங்சில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 82 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார் யாசிர் ஷா.

பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய யாசிர் ஷா, 4-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

2-வது விக்கெட்டை வீழ்த்தும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுக்களை பதிவு செய்தார். யாசிர் ஷா 33 போட்டியிலேயே 200 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 82 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான கிரிம்மெட் 1936-ம் ஆண்டு 36 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப்படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை யாசிர் ஷா முறியடித்துள்ளார்.

இந்திய அணியின் அஸ்வின் 37 போட்டியில் கைப்பற்றி 3-வது இடத்தையும், 38 போட்டியில் கைப்பற்றி லில்லீ, வக்கார் யூனிஸ் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

யாசிர் ஷாதான் நடப்பு கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஸ்பின்னரா? என்று ஆச்சரியப்பட வைக்கும் ஒரு சாதனையை பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா நிகழ்த்தியுள்ளார். அபுதாபியில் நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் உலக சாதனை நிகழ்த்தினார் யாசிர் ஷா.

அதாவது நியூஸிலாந்து பேட்ஸ்மென் வில்லியம் சோமர்வில்லை வீழ்த்திய யாசிர் ஷா தன் 33வது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிகக்குறைந்த டெஸ்ட்களில் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய உலகசாதனையை நிகழ்த்தியுள்ளார்.  82 ஆண்டுகளுக்கு முன்பாக கிளாரி கிரிம்மெட் என்ற ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் தனது 36வது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டியிருந்தார், அதனை இப்போது முறியடித்த உலக சாதனையை தனதாக்கினார் யாசிர் ஷா.

நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய யாசிர் ஷா 2வது இன்னிங்சில் லேதம், சோமர்வில் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி 200 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார். • SHARE

  விவரம் காண

  புவனேஷ்வர் பும்ராவை மட்டுமே நாம் நம்பி இருக்கிறோம்: விவிஎஸ் லட்சுமனன்

  புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்களை நாம் மிக அதிகம் நம்பியுள்ளோம். அவர்களை நோக்கியே ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும்...

  ஆசியாவின் ஹாட்டஸ்ட் மென்: டாப்-10ல் விராட் கோலி

  ஆசியாவிலேயே மிகவும் ஹாட்டாக இருக்கும் பிரபலங்களில் விராட் கோலியி முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இந்த...

  மீண்டும் சொதப்பிய ராகுல், விஜய்; சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளிப்பு !!

  ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த கே.எல் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோரை சமூக வலைதளங்களில்...

  வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் !!

  வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல் ராகுல் வெறும் 2 ரன்னில்...

  வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் !!

  வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன்...