சும்மா எல்லாத்துக்கும் அவரையே குறை சொல்லாதீங்க; கடுப்பான ஆஷிஸ் நெஹ்ரா

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபிக்காத பும்ராவிற்கு ஆதரவாக முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆஷிஸ் நெஹ்ரா குரல் கொடுத்துள்ளார்.

பும்ரா இந்திய அணிக்கு வந்த பிறகுதான், இந்திய அணி பவுலிங்கில் தலைசிறந்து விளங்க தொடங்கியது. பும்ராவின் வருகைக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் தலைநிமிர்ந்தது.

பும்ரா, ஷமி ஆகிய இருவரும் மூன்றுவிதமான போட்டிகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து இந்திய அணிக்கு வெற்றிகளை தேடித்தந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் பெரும்பாலான விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவதால், மற்ற பவுலர்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட்டு போய்விடுகின்றனர்.

சும்மா எல்லாத்துக்கும் அவரையே குறை சொல்லாதீங்க; கடுப்பான ஆஷிஸ் நெஹ்ரா !! 1

இந்நிலையில், காயத்தால் சில தொடர்களில் ஆடமுடியாத பும்ரா, காயத்திலிருந்து மீண்டு, இலங்கைக்கு எதிரான தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். காயத்திலிருந்து மீண்டுவந்தபிறகு, அவரது பவுலிங் முன்புபோல் இல்லை.

இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்படும்போதெல்லாம், அதை வீழ்த்தி கொடுத்து, டெத் ஓவர்களில் எதிரணிக்கு மெர்சல் காட்டி வெற்றிகளை குவித்து கொடுக்கும் பும்ரா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது வேதனையான விஷயம். பும்ராவின் கெரியரில் முதல் முறையாக 3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் இருந்திருக்கிறார்.

பும்ராவின் பவுலிங் எடுபடவில்லை, ஷமியும் ஆடும் லெவனில் இல்லை. எனவே இந்திய அணியின் பவுலிங் படுமோசமாக இருந்ததால், 3 போட்டிகளிலும் தோற்று, நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆகி அசிங்கப்பட்டது இந்திய அணி.

சும்மா எல்லாத்துக்கும் அவரையே குறை சொல்லாதீங்க; கடுப்பான ஆஷிஸ் நெஹ்ரா !! 2

இந்நிலையில், பும்ராவிற்கு ஆதரவாக முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள நெஹ்ரா, எல்லா தொடர்களிலுமே பும்ரா மிகச்சிறப்பாக பந்துவீச வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அவர் காயத்திலிருந்து இப்போதுதான் மீண்டு வந்துள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லா போட்டிகளிலும் எல்லா நேரத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று யாரிடமுமே எதிர்பார்க்கக்கூடாது. கோலி கூட சில தொடர்களில் சரியாக ஆடாமல் இருந்திருக்கிறார்.

பும்ராவும் ஷமியும் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக பந்துவீசி கொண்டிருக்கின்றனர். மற்ற பவுலர்களும் அவர்களது ரோலை உணர்ந்து செயல்பட வேண்டும். பும்ராவிற்கு அதிகமான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அணி நிர்வாகம் அணி தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பான ஆடும் லெவனை தேர்வு செய்ய வேண்டும் என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். • SHARE

  விவரம் காண

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு !!

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே நடக்கவுள்ள டி20...

  உலக லெவன் அணியை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அணி அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் !!

  உலக லெவனை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே...

  இவர் சொதப்பியதே தோல்விக்கு காரணம்: முண்ணனி வீரரை கைகாட்டும் சஞ்சய் மாஜரேக்கர்

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய...

  வீடியோ: பவுண்டரி லைனில் பிரம்மாண்ட கேட்ச் பிடித்த டு ப்லெசிஸ் மற்றும் மில்லர்!

  தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது...

  சச்சினை ‘சூச்சின்’ என கண்டபடிக்கு உளறிய டிரம்ப்: பதிலடி கொடுத்த ஐசிசி

  அமெரிக்க அதிபர் தனது பேச்சின் போது "சூ சின்" முதல் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய நாட்டில் இருப்பதாக...