எப்படி பழக்கப்பட்ட மைதானம் மாதிரி 21 பந்தில் 45 ரன்கள் அடிக்க முடிந்தது? ஐபிஎல் தான் காரணமா? - இந்தியா தோல்விக்கு காரணமான வீரர் பேட்டி! 1

21 பந்தில் 45 ரன்களை எப்படி அடிக்க முடிந்தது என்று மேத்தியூ வேட் பேட்டியளித்துள்ளார்.

டி20 உலக கோப்பைக்கு முன்பாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. முதல் டி20 போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 208 ரன்கள் அடித்தது.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்ச் 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கிய கிரீன், அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு 30 பந்துகளில் 61 ரன்கள் விலாச, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் சட்டென்று மேலே சென்றது. ஸ்மித் 35 ரன்கள் அடித்து வழக்கம் போல தனது பங்களிப்பை கொடுத்து வெளியேறினார். இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ரன்களை கட்டுப்படுத்தி வந்த இந்தியாவிற்கு, கீழ் வரிசையில் களமிறங்கிய மேத்தியு வேட் அச்சுறுத்தலாக திகழ்ந்தார். இவர் 21 பந்துகளில் 45 ரன்கள் விலாசி ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தார். 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை கைப்பற்றியது.

எப்படி பழக்கப்பட்ட மைதானம் மாதிரி 21 பந்தில் 45 ரன்கள் அடிக்க முடிந்தது? ஐபிஎல் தான் காரணமா? - இந்தியா தோல்விக்கு காரணமான வீரர் பேட்டி! 2

ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த மேத்யூ வேட். எப்படி என்னால் அதிரடியாக 45 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவ முடிந்தது என்பது பற்றி பேட்டி அளித்துள்ளார் அவர் கூறுகையில்,

எப்படி பழக்கப்பட்ட மைதானம் மாதிரி 21 பந்தில் 45 ரன்கள் அடிக்க முடிந்தது? ஐபிஎல் தான் காரணமா? - இந்தியா தோல்விக்கு காரணமான வீரர் பேட்டி! 3

“இந்தியாவில் விளையாடுவது எனக்கு மிகவும் பழக்கப்பட்டதாக மாறிவிட்டது. ஏனெனில் இங்கே நிறைய போட்டிகளை விளையாடி விட்டேன். இந்த மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகச் சாதகமாக இருந்தது. மைதானத்தின் போக்கை நன்கு அறிந்துவிட்டேன். அதன் காரணமாக என்னால் நன்றாக நான் குவிக்க முடிந்தது. இப்போது எனக்குள் நிறைய உறுதித் தன்மை வளர்ந்துவிட்டது. இந்த இடத்தில் இளம் வீரராக நான் இருந்திருந்தால் பவுன்டரிகள் அடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்து வழக்கமாக விளையாடுவதை விட பவுண்டரியில் மட்டுமே எனது நினைவு இருந்திருக்கும். அதனால் ஓரிரு பந்துகளில் நான் எனது விக்கெட்டை இழந்து இருக்கக்கூடும். அந்த தவறுகளை எனது பல வருட அனுபவம் மூலம் சரி செய்து கொண்டு இப்போது உறுதி அளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறேன்.” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.