வாய்ப்பு கிடைக்காத விரக்தி; திடீரென ஓய்வை அறிவித்த யூசுப் பதான் !! 1

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் இன் சகோதரருமான யூசுஃப் பதான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து தனது ஓய்வை திடீரென அறிவித்தார்.

2007 உலகக் கோப்பையின் பொழுது இந்திய அணிக்கு அறிமுகமான லோ ஆர்டர் பேட்ஸ்மேனான யூசுஃப் பதான் லிமிடெட் ஒரு போட்டிகளில் மிக சிறப்பாக செயல்படக்கூடிய வீரராகத் திகழ்ந்தார்.இவர் இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 810 ரன்கள் அடித்துள்ளார் அதில் 2 சதங்களும் மூன்று அரை சதங்களும் அடங்கும் மேலும் 33 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்,மேலும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 22 டி20 போட்டிகளில் பங்கேற்ற இவர் 236 ரன்கள் அடித்து உள்ளார், மேலும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வாய்ப்பு கிடைக்காத விரக்தி; திடீரென ஓய்வை அறிவித்த யூசுப் பதான் !! 2

அதிரடி வீரரான யூசுஃப் பதான் 174 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 3000 க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார் அதில் ஒரு சதமும் 13 அரை சதங்களும் அடங்கும். மேலும் பந்துவீச்சில் 44 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற முக்கியமான அணிகளில் பங்கேற்ற யூசுப் பதான் கடைசியாக 2019 ஐபிஎல் போட்டியில் விளையாடினார் அதற்கு பின் எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இன்று வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். மேலும் அவர் கூரியதாவது நான் என்னுடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் மேலும் எனது ரசிகர்களுக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்மற்றும் என்னுடைய அணிக்கும் என்னுடைய பயிற்சியாளர் எடுக்கும் மேலும் இந்த முழு நாடும் எனது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார் மேலும் உங்களுடைய ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி என்று தெரிவித்தார்.

மேலும் யூசுஃப் பதான் அகாடமி என்ற கிரிக்கெட் அகாடமி ஒன்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது,மேலும் யூசுப் பதானின் இந்த ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்

வாய்ப்பு கிடைக்காத விரக்தி; திடீரென ஓய்வை அறிவித்த யூசுப் பதான் !! 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *