யூசுப் பதானை1.9 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது ஹைதராபாத் !! 1
யூசுப் பதானை1.9 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது ஹைதராபாத்

அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதானை 1.9 கோடி ரூபாய் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

யூசுப் பதானை1.9 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது ஹைதராபாத் !! 2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இதில் அதிரடி ஆட்டக்காரரான யூசுப் பதானை 1.9 கோடி ரூபாய் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி விலைக்கு வாங்கியுள்ளது.

யூசுப் பதானை1.9 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது ஹைதராபாத் !! 2

கடந்த தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இவர் தனக்கான அடிப்படை விலையாக 75 லட்சத்தை நிர்ணயம் செய்திருந்தார். தற்போது இவரை ஹைதரபாத் அணி 1.9 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் இதுவரை 149 போட்டிகளில் விளையாடியுள்ள யூசுப் பதான், மொத்தமாக 2904 ரன்கள் எடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *