இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியட்திடம் அதிரடி வீரர் யுவராஜ் சிங் இழப்பீடாக 3 கோடி ரூபாய்கள் கேட்டு உள்ளார். இந்திய அணியின் கலட்டிவிடப்பட்ட ஆல் ரவுண்டர் யுவ்ராஜ் சிங். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியிலும் கலட்டி விடப்பட்டார் யுவ்ராஜ் சிங். தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிர்க்கெட் அகாடமிக்கு சென்று தனது உடல் தகுதியை நிரூபிக்கும் ‘யோ-யோ’ தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார்.
அதற்க்கான முடிவுள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த முறை செய்த ‘யோ-யோ’ உடல் தகுதித் தேர்வுகள் நியூலாந்து தொடருக்கான அணித்த தேர்விற்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
தற்போது எதற்க்காக அவர் 3 கோடி ரூபாய்கள் இழப்பீடு கேட்டார் எனப் பார்ப்போம். கடந்த 2016ஆம் ஆண்டு வருடம் நடந்த டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடிய போது யுவ்ராஜ் சிங்க் காயமடைந்தார்.
இவ்வாறு அணிக்காக விளையாடும் போது காயமடையும் இந்திய வீரர்களுக்கு ஒப்பந்தப்படி அதற்கேற்ற தொகை இழப்பீடாகக் கொடுப்பது வழக்கம். அதன்படி காயமடைந்த பின்னர் யுவ்ராஜ் சிங் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் 3 கோடி இழப்பீடு கேட்டு கடிதம் எழுதியிருந்தார். மேலும், அந்த காயத்தினால் அந்த வருட ஐ.பி.எல் தொடரின் சில போட்டிகளை விளையாட முடியாமல் போனதால் அவருக்கு பொருளாதார ரீதியாக சில இழப்புகள் ஏற்ப்பட்டுவிட்டதாகவும் கடிதம் எழுதியிருந்தார்.
கேட்க்கப்ட்டிருந்த அந்த இழப்பீட்டுத் தொகை இன்னும் அவரிடம் வந்து சேரவில்லை என தற்போது மீண்டு பி.சி.சி.ஐயை அனுகியுள்ளார் யுவ்ராஜ் சிங். இதற்கு முன்னர் 2015 உலகக்கோப்பையின் போது வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காயமடைந்தார். இதன் காரணமாக அந்த வருட ஐ.பி.எல் தொடரில் முகமது சமியால் கலந்து கொள்ள இயலவில்லை. அதற்கு இழப்பீடாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு 2.2 கோடிகள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதே போல் அணிக்காக ஆடிய போது காயமடைந்தா காரணத்தால் அவருடைய ஐ.பி.எல் மதிப்பை வைத்து 3 கோடிகள் இழப்பீடாக கேட்கிறார் யுவராஜ் சிங்.
இதனைப் பற்றி பி.சி.சி.ஐ அதிகாரி மும்பை மிரர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
இழப்பீடு கேட்டு பல முறை கடிதம் எழுதிவிட்டார் யுவ்ராஜ் சிங். மேலும், அவரது சார்பாக அவரது தாய் பலமுறை தொலைபேசியில் அழத்துப் பேசிவிட்டார். அவருடைய சன்ரைசர்ஸ் அணி சகா நெஹ்ரா 5 ஐ.பி.எல் போட்டிகள் தவற் விட்டார், அவருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. ஆனால், யுவராஜ் சிங்க் விசயத்தில் அந்த பிரச்சனை நகர மாட்டேன் என்கிறது.
இந்த வருடத்தில் பல வீரர்கள் ஐ.பி.எல் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் ஆடவில்லை. கே.எல்.ராகுல், முரளி விஜய், ரவி அஷ்வின் போன்ற இந்திய வீரர்கள் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இந்த வருட இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முரளி விஜய் காயமடைந்த தோல் பட்டையுடன் தான் விலையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் இந்த மாதம் 23ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. ஒரு வேலை யுவ்ராஜ் போன்ற வீரர்கள் உடல் தகுதித் தேர்வில் தேர்வானால் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் ஆட தேர்வு செய்யப்படலாம்.
மீண்டும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அடுத்து வரும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுகிறார்கள். ஆனால் இந்த முறை அவர்களுக்கு முக்கியமான வேலையை கொடுத்திருக்கிறார்கள். பஞ்சாப் அணிக்காக விளையாடும் ஹர்பஜன் கேப்டனாகவும் யுவராஜ் சிங் துணைகேப்டனாகவும் செயல்பட உள்ளார்கள்.

கடந்த ரஞ்சி கோப்பை சீசனிலும் ஹர்பஜன் சிங் தான் கேப்டனாக இருந்தார், ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால், ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக அவரது வேலையை யுவராஜ் சிங் பார்த்துக்கொண்டார். அடுத்த சீசன் தான், யுவராஜ் சிங்குக்கு முக்கியமான தொடர் ஆகும்.
அவரது கிரிக்கெட் வாழ்க்கை தொடருமா முடியுமா என்ற பதிலே அடுத்த சீசனில் தான் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள் அணியில் இடம் பிடித்த யுவராஜ் சிங் சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிராக அவர் 150 ரன் அடித்து அசத்தினார். ஆனால், அதற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படி சோபிக்கவில்லை, இதனால் அணியில் இருந்து அவரை தூக்கிவிட்டார்கள்.
ஆனால் இருவரும் ரஞ்சி தொடரின் முதல் சுற்றில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.