எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம்

யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார். அதாவது தன் காலத்தில் ஐபிஎல் இல்லை என்பதால் தன் ஹீரோக்களை டிவி மூலம் ஆடுவதைப் பார்த்து உத்வேகம் பெற்று, சில நாட்களிலேயே அவர்களுடன் சேர்ந்து ஆடும் பாக்கியம் கிடைத்தது, இப்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட வீரர்கள், இளம் வீரர்கள் விரும்புவதில்லை என்கிறார் யுவராஜ் சிங்.

எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !! 1

ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது,

“நான் ஐபிஎல் இல்லாத போது 2000-ம் ஆண்டில் வந்தேன். நான் எனக்கு ஆதர்சமான வீரர்களை தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்தேன் ஒருநாள் அவர்களுக்கு அருகிலேயே வீரராக அமர்ந்தேன். அவர்களிடமிருந்து ஏகப்பட்டதைக் கற்றுக் கொண்டேன், அவர்கள் மீது ஏகப்பட்ட மரியாதை எனக்கு எப்போதும் உண்டு.

அவர்களிடமிருந்துதான் எப்படி நடந்து கொள்வது, மீடியாவிடம் எப்படி பேசுவது ஆகியவற்றைக் கற்றுக் கொண்டேன். இன்று மூத்த வீரர்களே அணியில் இல்லை, அனைவரும் சம வயதுடையவராக உள்ளனர்.

எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !! 2

இன்று இளம் வீரர்க்ளுக்கு பணமழை ஐபிஎல் ஒப்பந்தங்கள் கிடைத்து விடுகின்றன, இந்தியாவுக்காக ஆடும் முன்னரே ஐபிஎல் மூலம் பணம் கொழிக்க தொடங்குகின்றனர். அதனால் 4 நாட்கள் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட்டை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. 4 நாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் குறித்தான இவர்களது அணுகுமுறை மோசமாக உள்ளது.

நான் டெஸ்ட் கிரிகெட் ஆடியே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தேன். 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடினேன். நான் உள்ளேயும் வெளியேயுமாக இருந்தேன் ஏனெனில் போட்டி அதிகமாக இருந்தது.

ஐபிஎல் பணமழை பொழிவதால் இளைஞர்களின் கவனத்தை திருப்பி விடுகிறது. இப்போதுள்ள வீரர்களைக் கூறவில்லை, ஆனால் இளம் வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் மீது கவனம் செலுத்துகிறது. மாநிலங்களுக்கான 4 நாள் கிரிக்கெட்டில் ஆடுவதில்லை. • SHARE
 • விவரம் காண

  வீடியோ: கொலவெறி பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர்!

  தனுஷ் பாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலக அளவில்...

  “என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்” – கிறிஸ் கெயில் வருத்தம்!

  "என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்" - கிறிஸ் கெயில் வருத்தம்! கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் என்னை போன்றவர்கள் மீது இன வெறுப்பை காட்டியுள்ளார்கள் என...

  சொந்த அணியில் இடமில்லாததால்.. இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு!

  இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு! சொந்தநாட்டு அணியான இங்கிலாந்தில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால், உலகக்கோப்பையை வென்ற...

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? – பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்!

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? - பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்! இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில்...

  கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. – கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு!

  கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. - கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு! விராத் கோலியை கண்டால் எனக்கு சற்றும் பயமில்லை...