இரண்டு புதிய பந்தினால் தான் இந்தியா வென்றது எனக்கூறிய ஸ்மித்திற்கு பதிலடி கொடுத்த சகால்!! 1

இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தபோது ஆஸ்திரேலியா வெற்றிப் பெறுவதற்கு 70 சதவீத வாய்ப்பு இருந்தது. ஆனால், ஆடம் ஸம்பா ஓவரில் பாண்டியா விளையாடிய விதம் ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றியை எங்களுக்கு கொடுத்தது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் தெரிவித்தார்.

போட்டியின் முடிவில் ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறியதாவது,

ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்துகள் கொடுப்பது வழக்கம். ஆனால், நேற்றைய போட்டியில் 21 ஓவர் தான் இருந்தது. அந்த போட்டியிலும் இரண்டு பந்துகள் கொடுக்கப்ட்டது டி20 போட்டியில் இரண்டு பந்துகள் கொடுத்தாற் போல் ஆகிவிட்டது.

இரண்டு புதிய பந்தினால் தான் இந்தியா வென்றது எனக்கூறிய ஸ்மித்திற்கு பதிலடி கொடுத்த சகால்!! 2

மேலும், ஆடுகளம் புதிய பந்திற்க்கு சற்று சாதகமாகவே இருந்தது. இத்னால் இந்திய அணி விக்கெட்டுகளை எளிதாக கைபற்றி வென்றது எனக் கூறியிருந்தார்.

 

இதற்க்கு பதில் அளிக்கும் வகைய்ய்ல் பேசிய இந்திய அணியின் சுழற்ப்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சகால்,

இரண்டு பந்துகள் கொடுக்கப்பட்டாலும் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். அதுவே 21 ஓவர்கள் தான். மேலும், டி20 போட்டியில் இரண்டு பந்துகள் கொடுக்கப்பட்டால் பேட்ஸ்மேனுக்குத் தான் சாதகமாக இருக்கும். அவர்கள் நன்றாக ஆடியிருந்தால் வென்றிருப்பார்கள்

எனக் கூறினார் சகால்.

கோலியின் தாக்குதல் பாணி ஆட்டம்தான் என்னை அபாரமாக பந்துவீச வைத்தது என்று  இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் தெரிவித்தார்.

சென்னையில் சேப்பாகக்த்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இரண்டு புதிய பந்தினால் தான் இந்தியா வென்றது எனக்கூறிய ஸ்மித்திற்கு பதிலடி கொடுத்த சகால்!! 3
Cricket – India v England – First T20 International – Green Park Stadium, Kanpur, India – 26/01/17 – India’s Yuzvendra Chahal celebrates the wicket of England’s Sam Billings. REUTERS/Danish Siddiqui

இதில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் 5 ஓவர்களில் 30 ஓட்டங்களைக் கொடுத்து மேக்ஸ்வெல் உள்ளிட்ட மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சாஹல், “மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்துவீசக் கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் தாக்குதல் பாணியில் அபாரமாக பந்துவீசக் கூடியவர்களாக இருப்பார்கள்.

கேப்டன் கோலியின் தாக்குதல் பாணி ஆட்டத்தைக் கடைப்பிடிக்கக் கூடியவராக இருக்கும்போது, அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அதிக சுதந்திரத்தோடு செயல்பட முடியும்.

நானும், குல்தீப் யாதவும் தாக்குதல் பாணியிலான பந்துவீச்சாளர்கள் என்பதால் விக்கெட்டை வீழ்த்துவதிலேயே தீவிரம் காட்டுகிறோம். முதலில் குல்தீப் யாதவ் பந்துவீசினால், பந்து எங்கிருந்து சுழல்கிறது, எப்படி எதிரணி பேட்ஸ்மேனை வீழ்த்துவது என்பது குறித்து நான் அவருக்கு ஆலோசனை சொல்வது வழக்கம்.

இரண்டு புதிய பந்தினால் தான் இந்தியா வென்றது எனக்கூறிய ஸ்மித்திற்கு பதிலடி கொடுத்த சகால்!! 4
Indian bowler Yazvendra Chahal (R) celebrates the dismissal of England batsman Ben Stokes during the third T20 cricket match between India and England at the Chinnaswamy Cricket Stadium in Bangalore on February 1, 2017.
England is chasing a target of 203 runs scored by India. / AFP PHOTO / Manjunath KIRAN / —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT

விக்கெட்டை வீழ்த்தும் முனைப்பில் செயல்படுவதால் பாதுகாப்பாக பந்துவீசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி பந்துவீச நினைத்தால், வெற்றி பெற முடியாது.

ஐபிஎல் போட்டியில் மேக்ஸ்வெல்லுக்கு அதிக அளவில் பந்துவீசிய அனுபவம் எனக்கு உண்டு. இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரையில் எங்களால் பெரிய அளவில் ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் பாதுகாப்பாக பந்துவீச முடியவில்லை. அதனால் எங்களின் பந்துவீசும் திட்டத்தில் மாற்றம் செய்தோம்.

அதிவேக

மேக்ஸ்வெல் நல்ல ஷாட்களை மட்டுமே ஆடினால், நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பார். அதேநேரத்தில் அவர் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே விளையாடினால் விரைவில் ஆட்டமிழப்பார் என நினைத்தோம்.

அதனால் மேக்ஸ்வெல் தனது கால்களை எப்படி நகர்த்துகிறார் என்பதைப் பொறுத்து ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பந்துவீசுமாறு தோனியும், கோலியும் என்னிடம் தெரிவித்தார்கள். அதன்படி சிறப்பாக பந்துவீசி அவரை வீழ்த்திவிட்டேன்.

ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாதபோதும், தோனியும், ஹார்திக் பாண்டியாவும் விளையாடிய விதம் மிக அற்புதமானதாகும். இங்கு நாங்கள் 230 முதல் 240 ஓட்டங்கள் வரை எடுத்திருந்தால், அதுவே நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்.

இந்த ஆட்டத்தில் நாங்கள் 87 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஆஸ்திரேலியா வெற்றிப் பெறுவதற்கு 70 சதவீத வாய்ப்பு இருந்தது.

ஆடம் ஸம்பா ஓவரில் பாண்டியா விளையாடிய விதம் 5 பந்துகளில் 23 ஓட்டங்கள் கொடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. நாங்களும் சிறப்பாக பந்துவீசிவிட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *