இந்திய சுழற்பந்து வீச்சாளர் பெற்றோருக்கு கொரோனா தொற்று 1

இந்திய சுழற்பந்து வீச்சாளர் பெற்றோருக்கு கொரோனா தொற்று

இந்திய அணியின் சுழற்பந்து சஹால் வீச்சாளர்கள் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அவரது மனைவி தனஸ்ரீ வெர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்

சஹால் மற்றும் தனஸ்ரீ ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சஹால் உடைய தாய் தந்தை இருவருக்கும் தற்பொழுது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சஹால் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் அவருடைய தாயார் வீட்டில் பயன்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தனஸ்ரீ இன்ஸ்டகிரம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Yuzvendra Chahal with his parents (Photo- Twitter)

நான் மருத்துவமனையில் சிகிச்சை எப்படி நடைபெறுகிறது என்பதை பார்த்திருக்கிறேன். இந்த தொற்றானது மிகவும் அபாயகரமானது எனவே அனைவரும் மிக பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அனைவரும் வீட்டில் தயவுசெய்து அதை பாதுகாப்பாக இருங்கள் வெளியே எங்கும் செல்லாதீர்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

எனது தாய் தந்தைக்கும் கொரோனா இருந்தது

மேலும் பேசிய தனஸ்ரீ தனது தாய் தந்தை இருவருக்கும் முன்னர் கொரனோ இருந்தது என்று கூறினார். அவர்கள் இருவருக்கும் கொரோனா இருந்த வேளையில் நான் தனிமையில் இருந்தேன். என்னால் அவர்கள் இருவரையும் பாதுகாப்பாக உடன் இருந்து பார்த்துக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் என் நேரமும் அவர்களுடைய உடல் நலம் குறித்து நான் விசாரித்து கொண்டேதான் இருந்தேன். தற்பொழுது அவர்கள் இருவரும் குணமடைந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் என்று கூறியுள்ளார்.

Yuzvendra Chahal, Dhanashree Verma

மேலும் எனது சொந்த மாமா மற்றும் அத்தை இருவரையும் இந்த குர்ஆனோ தொற்றால் நான் இழந்தேன். அவர்கள் இருவரும் இவ்வளவு சீக்கிரத்தில் இறப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்த தொற்றானது மிகவும் அபாயகரமானது என்பதை நான் மீண்டும் கூறிக்கொள்கிறேன். அனைவரும் தயவு செய்து வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Yuzvendra Chahal's parents (Photo- Twitter)

சஹால் தற்பொழுது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வீரர்களைக் கொண்ட அணியில் இவரும் ஒரு வீரராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாட இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அதனைத் தொடர்ந்துஅதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் கலந்து கொள்ள போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *