நான்கு மாதங்களுக்கு பிறகு ரீண்ட்ரீ கொடுக்கும் முக்கிய வீரர்... முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இந்திய அணி !! 1

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. ஜிம்பாப்வேவின் ஹராரேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

நான்கு மாதங்களுக்கு பிறகு ரீண்ட்ரீ கொடுக்கும் முக்கிய வீரர்... முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இந்திய அணி !! 2

ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக தவித்து வந்த தீபக் சாஹர் இந்த போட்டிக்கான இ ந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளார். அதே போன்று சுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் போன்ற வீரர்களும் முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

ஷிகர் தவான், சுப்மன் கில், இஷான் கிஷன், கே.எல் ராகுல், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்‌ஷர் பட்டேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

ஜிம்பாப்வே அணியின் ஆடும் லெவன்;

மருமனி, இன்னோசண்ட் கையா, சென் வில்லியம்ஸ், வெஸ்லே மாதர்வரே, சிகந்தர் ரசா, ரீகிஸ் சகாபவா, ரியான் புரல், லூக் ஜான்க்வே பிராட் எவ்னாஸ், விக்டர் நயோசி, ரிச்சர்ட் நகர்வா.

Leave a comment

Your email address will not be published.