தமிழக அணிக்கு மீண்டும் திரும்பினார் கேப்டன் விஜய் சிங்கர் !! 1
Tamil Nadu skipper Vijay Shankar, who missed the first two matches, will be back in action against Goa for the third T20 League (South Zone) match at the Dr PVG Raju ACA Sports Complex, Vizianagaram, on Thursday.
தமிழக அணிக்கு மீண்டும் திரும்பினார் கேப்டன் விஜய் சிங்கர்

கனுக்காலில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக சையத் முஸ்தாக் அலி டிராபியில் தமிழக அணியின் முதல் இரண்டு போட்டியில் பங்கேற்காத விஜய் சங்கர் அடுத்த போட்டியில் மீண்டும் களம் காண்கிறார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம்.

இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.

இந்த ஆண்டுக்கான இந்த தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் கோப்பையை கைப்பற்ற போராடி வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த தொடருக்கான தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த விஜய் சங்கருக்கு கனுக்காலில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

தமிழக அணிக்கு மீண்டும் திரும்பினார் கேப்டன் விஜய் சிங்கர் !! 2

இதன் காரணமாக ஆந்திரா மற்றும் கேரளா அணிகள் இடையேயான லீக் போட்டியில் விஜய் சங்கர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக துணை கேப்டன் அப்ரஜித் அணியை கடந்த இரண்டு போட்டியில் வழிநடத்தினார். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தின் மூலம் தமிழக அணி அபார வெற்றி பெற்றது.

தமிழக அணிக்கு மீண்டும் திரும்பினார் கேப்டன் விஜய் சிங்கர் !! 3
Dinesh Karthik of Tamilnadu on nets during practice session on the eve of Ranji Trophy Group B match against Delhi, at Ferozeshah Kotla stadium in New Delhi on Nov 23rd 2012. Express photo by RAVI KANOJIA.

இந்நிலையில் ஏற்கனவே வெற்றிப்பாதையில் பயணிக்கும் தமிழக அணிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக கடந்த இரண்டு போட்டியில் விளையாடாத விஜய் சங்கர், அடுத்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார்.

தமிழக அணிக்கு மீண்டும் திரும்பினார் கேப்டன் விஜய் சிங்கர் !! 4
Coach Hrishikesh Kanitkar said that the return of Vijay augurs well for the team. © BCCI

 

இது குறித்து பேசிய தமிழக அணியின் பயிற்சியாளர் கிரிஷ்கேஸ் விஜய் சங்கரின் வருகை தமிழக அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. எங்கள் வீரர்கள் அனைவரும் முழுமையான உடல் தகுதி மற்றும் மன வலிமையுடன் உள்ளனர். இந்த தொடரின் கோப்பையை கைப்பற்ற நாங்கள் முழுமையாக போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *