உலககோப்பையிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய மெஸ்ஸி 1

உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஸ்சியாவில் நடந்து வருகிறது. இதில் முதல் நாக் அவுட் சுற்று போட்டியில் பலம்வாய்ந்த பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா இரு அணிகளும் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. கண்ணீருடன் மெஸ்ஸி வெளியேறினார்.

உலககோப்பையிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய மெஸ்ஸி 2

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். பிரான்ஸ் அணியின் அண்டோனி கிரிஸ்மான் 13வது நிமிடத்தில் பெனால்டி சூட் முறையில் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு எடுத்து சென்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ஜென்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து நாக் அவுட் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்சும் அர்ஜென்டினாவும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அதிரடி 

உலககோப்பையிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய மெஸ்ஸி 3

 

இரண்டாவது பாதி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அர்ஜென்டினா அணியின் மக்கார்டோ ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா அணியை முன்னிலைக்கு எடுத்து சென்றார்.

இதற்க்கு தக்க பதிலடியாக பிரான்ஸ் அணியின் தடுப்பாட்டக்காரர் பெஞ்சமின் பாவர்ட் சமநிலை கோல் அடித்து அணியை 2-2 என்ற கணக்கிற்கு எடுத்து சென்றார்.

19 வயது இம்பாபே இரண்டு கோல் 

உலககோப்பையிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய மெஸ்ஸி 4

பிரான்ஸ் அணியின் இம்பாபே அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்து அணியை 4-2 என்று பலமிக்க முன்னணிக்கு எடுத்து சென்றார். கடைசி நிமிடம் வரை எவ்வளவோ முயற்சித்தும் பதிலடி கொடுக்கமுடியவில்லை.

கூடுதல் நிமிடங்களில் அர்ஜென்டினா வீரர் அகுரோ ஒரு கோல் அடித்து 3-4 என்ற கணக்கில் கொண்டு சென்றார். இன்னும் இரண்டு நிமிடத்தில் சமன் செய்ய ஒரு கோல் அடிக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் அடிக்க முடியாத காரணத்தினால் அர்ஜென்டினா அணி தோல்வியை தழுவியது.

கண்ணீர் மல்க வெளியேறிய மெஸ்ஸி 

உலககோப்பையிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய மெஸ்ஸி 5

இந்த தோல்வியை தழுவிய காரணத்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது அர்ஜென்டினா அணி. இதனால், அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி கண்ணீருடன் வெளியேறினார்.

பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியாது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *