இளம் வீரர் அணியில் இருந்து நீக்கம்... பாகிஸ்தான் அணியுடனான அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை (4-9-22) நடைபெறும் போட்டியில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் முடிவில் ஹாங்காங் மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறின. மற்ற அனைத்து அணிகளும் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

இளம் வீரர் அணியில் இருந்து நீக்கம்... பாகிஸ்தான் அணியுடனான அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளன. நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்திய அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இந்த முறை வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இரு அணிகள் இடையேயான இந்த போட்டி மீது மிக அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இளம் வீரர் அணியில் இருந்து நீக்கம்... பாகிஸ்தான் அணியுடனான அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என்பதால் ரிஷப் பண்ட்டிற்கு இந்த போட்டிக்கான ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.

இளம் வீரர் அணியில் இருந்து நீக்கம்... பாகிஸ்தான் அணியுடனான அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 4

அதே போல் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக அக்‌ஷர் பட்டேல் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்கள் பலர் ஜடேஜாவிற்கு பதிலாக தீபக் ஹூடாவிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தாலும், இந்திய அணி அக்‌ஷர் பட்டேலிற்கே முன்னுரிமை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வீரர் அணியில் இருந்து நீக்கம்... பாகிஸ்தான் அணியுடனான அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 5

பந்துவீச்சாளர்கள் வரிசையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. ஹாங்காங் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஆவேஸ் கான் அதிமான ரன்கள் வழங்கியிருந்தால் அவருக்கான இடம் இந்த போட்டியில் மறுக்கப்படாது என்றே தெரிகிறது. எனவே பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆவேஸ் கான், புவனேஷ்வர் குமார், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரே இடம்பெறுவார்கள்.

பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *