ஜூனியர் கால்பந்து உலகக்கோப்பை போட்டி விவரங்கள்!! 1

17-வது ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான) உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய 6 நகரங்களில் அரங்கேறுகிறது. இதில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பெறும் அணிகளில் சிறப்பான 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.

ஜூனியர் கால்பந்து உலகக்கோப்பை போட்டி விவரங்கள்!! 2

தொடக்க நாளான 6-ந் தேதி டெல்லியில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள கொலம்பியா-கானா (மாலை 5 மணி), இந்தியா-அமெரிக்கா (இரவு 8 மணி) அணியும், மும்பையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து-துருக்கி (மாலை 5 மணி), பராகுவே-மாலி (இரவு 8 மணி) அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி நேற்று காலை மும்பை வந்து சேர்ந்தது. அந்தேரியில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது.

முதல் நாளில் மும்பையில் நடைபெறும் 2 லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் 20 ஆயிரம் விற்பனை ஆகி இருக்கிறது. போட்டி தொடங்க இன்னும் 10 நாட்கள் இருப்பதால் எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் மொத்தம் 45,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டதாகும்

ஜூனியர் கால்பந்து உலகக்கோப்பை போட்டி விவரங்கள்!! 3

இந்தியாவில் நடைபெறும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் டிக்கெட் விலை 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்தாட்ட போட்டிகளுக்கு இந்தியாவில் ரசிகர்கள் குறைவாகவே உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் வரும் ஆக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடர் நடைபெற உள்ளது.

ஜூனியர் கால்பந்து உலகக்கோப்பை போட்டி விவரங்கள்!! 4

கொல்கத்தா, புதுடெல்லி, கொச்சி, கோவா, கவுஹாத்தி, நவி மும்பை ஆகிய 6 இடங்களில் நடைபெறும் இப்போட்டியில், பார்வையாளர்களை அதிகரிக்கும் வகையில் டிக்கெட் விலை 150 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள், ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான பிபா சார்பில் ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் அக்டோபர் 6-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இந்திய அணியில் மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் உள்ள ஷாஹுபுரி பகுதியில் வசித்து வரும் அனிகெட் ஜாதவ் இடம்பெற்றுள்ளார். ஜாதவின் தந்தை ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

ஜூனியர் கால்பந்து உலகக்கோப்பை போட்டி விவரங்கள்!! 5

இந்நிலையில், கோலாப்பூர் எம்.பி. சத்ரபதி சம்பாஜி ராஜே கால்பந்தாட்ட வீரர் அனிகெட் ஜாதவ் வீட்டுக்கு இன்று மதியம் சென்றார். உலகக் கோப்பையில் விளையாட ஜாதவ் தேர்வானதற்கு அவரது தாய், தந்தையருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, வறுமை நிலையில் வாடும் அவரது குடும்பத்துக்கு முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மும்பையில் உலக கோப்பை தொடர்பாக வைக்கப்படும் டிஜிட்டல் விளம்பர பலகைகளில் கண்டிப்பாக ஜாதவ் படம் இடம் பெறவேண்டும் எனவும் அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *