இத்தாலி அணி பயிற்சியாளர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்மேளனத தலைவர் கார்லோ ராஜினாமா 1

உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாததால் இத்தாலி கால்பந்து அண்யின் பயிற்சியாளர் ஜியான் பியாரோ வென்டுரோ நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் கார்லோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.இத்தாலி அணி பயிற்சியாளர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்மேளனத தலைவர் கார்லோ ராஜினாமா 2

ரஷியாவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச்சுற்றின் முடிவில் இத்தாலி அணி நேரடியாக தகுதி பெறவில்லை பிளேஆஃப் சுற்றில் வெற்றி பெற்றால்தான் தகுதி பெற முடியும் என்ற நிலை உருவானது.

அதன்படி இத்தாலி அணி பிளேஆஃப் சுற்றில் சுவீடன் அணியை தொடர்கொண்டது. இரு அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் தலா ஒருமுறை மோத வேண்டும். அதில் யார் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.

சுவீடனுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் சுவீடன் 1-0 என வெற்றி பெற்றது. பின்னர் இத்தாலிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற 2-வது லெக்கில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இரு போட்டிகளையும் சேர்த்து சுவீடன் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது. 1958-ம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 60 ஆண்டுகள் கழித்து இத்தாலி உலகக்கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் ஏமாற்றம் அளித்தது.

2-வது லெக் போட்டி முடிந்த உடனேயே, அந்த அணியின் கேப்டனும் தலைசிறந்த கோல் கீப்பரும் ஆன பஃபன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் இன்று இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவரான கார்லோனா தவேச்சியோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த புதன்கிழமை இத்தாலி அணி பயிற்சியாளரான ஜியான் பியோரா அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *