இந்திய அணி இரண்டாக பிளவுபட்டுள்ளது; புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் !! 1

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் அக்தர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு துபாயில் துவங்கியது. இந்த தொடரை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்திய அணியே முதன்மையானதாக பார்க்கப்பட்டது.

கே.எல் ராகுல், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலும், ஐபிஎல் தொடர் நடைபெற்ற அதே துபாய் ஆடுகளங்களில் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் நடைபெறுவதாலும் மற்ற அணிகளைவிட இந்திய அணிக்கே கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டது.

இந்திய அணி இரண்டாக பிளவுபட்டுள்ளது; புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் !! 2


ஆனால், இந்திய அணியோ இந்த தொடரில் மிக மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முன்னாள் வீரர்கள் பலர் நமீபியா போன்ற அணிகளோடு ஒப்பிட்டு விமர்சிக்கும் அளவிற்கு இந்திய அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட தவறவிட்டுள்ளது.


எஞ்சியுள்ள போட்டிகளிலாவது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் காத்துள்ள நிலையில், இந்திய அணி இன்று (நவம்பர் 3) நடைபெறும் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்திய அணி இரண்டாக பிளவுபட்டுள்ளது; புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் !! 3

இந்நிலையில் இந்திய அணி குறித்தான விவாதங்கள் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக தற்போது பேசப்பட்டு வருகிறது அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் சாகிப் அக்தர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்குள்ளேயே இரண்டு பிரிவுகளாக செயல்படுகின்றனர், ஒரு பிரிவினர் விராட் கோலிக்கு ஆதரவாகவும் மற்றொரு பிரிவினர் விராட் கோலிக்கு எதிராகவும் செயல்படுகின்றன, இப்படி ஏண் இந்திய அணிக்குள் உருவானது என்பது தெரியவில்லை. ஆனால் இந்திய அணிக்குள் இப்படி இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. விராட் கோலியின் தவறான முடிவால் அல்லது ஒருவேளை விராட் கோலிக்கு இதுதான் கடைசி டி20 தொடர் கேப்டன்ஷிப் என்பதால் இப்படி இந்திய அணிக்குள் பிரிவினை ஏற்பட்டிருக்கலாம் என்று சாகிப் அக்தர் தெரிவித்திருந்தார், என்னதான் இருந்தாலும் விராட் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது என்று அதில் பேசினார்.

இந்திய அணி இரண்டாக பிளவுபட்டுள்ளது; புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் !! 4

மேலும் பேசிய அவர்,நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாசை இழந்ததும் ஒட்டுமொத்த இந்திய அணியும் தலையை தொங்க விட்டது, டாசை இழந்துவிட்டால் போட்டி முடிந்துவிடும் என்பது அர்த்தம் கிடையாது அதற்கான முன்னேற்பாடுகளை செய்து விளையாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *