இந்த நான்கு  அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி... சாம்பியன் பட்டம் இந்த அணிக்கு தான்; ஆடம் கில்கிறிஸ்ட் ஆரூடம் !! 1
இந்த நான்கு  அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி… சாம்பியன் பட்டம் இந்த அணிக்கு தான்; ஆடம் கில்கிறிஸ்ட் ஆரூடம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த எந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற 50 ஓவர் போட்டிகளுக்கான ஆசிய கோப்பை தொடரை கெத்தாக கைப்பற்ற இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதன்பின் இந்த மாத இறுதியில் துவங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த நான்கு  அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி... சாம்பியன் பட்டம் இந்த அணிக்கு தான்; ஆடம் கில்கிறிஸ்ட் ஆரூடம் !! 2

அந்தவகையில், எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஆடம் கில்கிறிஸ்ட், எந்த எந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறித்தான தனது கணிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நான்கு  அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி... சாம்பியன் பட்டம் இந்த அணிக்கு தான்; ஆடம் கில்கிறிஸ்ட் ஆரூடம் !! 3

இது குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆசிய கோப்பை தொடரின் மிரட்டல் வெற்றிக்கு பிறகு இந்திய அணிக்கு அதிகமான நம்பிக்கையும், புத்துணர்சியும் கிடைத்திருக்கும். ஆசிய கோப்பை தொடரின் மூலம் கிடைத்துள்ள நம்பிக்கை இந்திய அணிக்கு உலகக்கோப்பை தொடரிலும் உதவியாக இருக்கும். இந்திய அணிக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணியும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என நம்புகிறேன். அதே போன்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *