சுப்மன் கில், விராட் கோலி இல்லை… இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது இந்த இரண்டு பேர் கையில் தான் உள்ளது; சுரேஷ் ரெய்னா நம்பிக்கை
எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பும்ராஹ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார்கள் என முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் செப்டம்பர் 30ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், இந்திய அணி இந்த முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகமாக நிலவி வருகிறது. இதனால் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வருகின்றனர். அதே போல் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் ஓபனாக பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா, உலகக்கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் மற்றும் பும்ராஹ்வின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், “உலகக்கோப்பை தொடரில் பும்ராஹ் மற்றும் குல்தீப் யாதவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். என்னை பொறுத்தவரையில் குல்தீப் யாதவும், பும்ராஹ்வும் தான் இந்திய அணியின் துருப்பு சீட்டாகவும் இருப்பார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய சுரேஷ் ரெய்னா, “விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தற்போது நல்ல பார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். இந்திய அணியின் முதல் மூன்று வீரர்களும் தரமான வீரர்களாக உள்ளனர், இதில் குறிப்பாக விராட் கோலி 35 – 40 ஓவர்கள் வரை களத்தில் நின்றுவிட்டால் இந்திய அணியால் இலகுவாக சாம்பியன் பட்டத்தை கூட வெல்ல முடியும்” என்று தெரிவித்தார்.