ஆசிய கோப்பைய ஜெயிக்கிறது ரொம்ப ஈசி... ஆனா உலகக்கோப்பைய இந்திய அணி ஜெயிக்கிறது கஷ்டம் தான்; முன்னாள் இந்திய வீரர் சொல்கிறார் 1
ஆசிய கோப்பைய ஜெயிக்கிறது ரொம்ப ஈசி… ஆனா உலகக்கோப்பைய இந்திய அணி ஜெயிக்கிறது கஷ்டம் தான்; முன்னாள் இந்திய வீரர் சொல்கிறார்

எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்ற வாய்ப்பு குறைவு என முன்னாள் இந்திய வீரரான அதுல் வஸ்ஸான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற 50 ஓவர் போட்டிகளுக்கான ஆசிய கோப்பை தொடரை கெத்தாக கைப்பற்ற இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதன்பின் இந்த மாத இறுதியில் துவங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

ஆசிய கோப்பைய ஜெயிக்கிறது ரொம்ப ஈசி... ஆனா உலகக்கோப்பைய இந்திய அணி ஜெயிக்கிறது கஷ்டம் தான்; முன்னாள் இந்திய வீரர் சொல்கிறார் 2

பல முன்னாள் வீரர்களும் இந்திய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான அதுல் வஸ்ஸானோ, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பைய ஜெயிக்கிறது ரொம்ப ஈசி... ஆனா உலகக்கோப்பைய இந்திய அணி ஜெயிக்கிறது கஷ்டம் தான்; முன்னாள் இந்திய வீரர் சொல்கிறார் 3

இது குறித்து அதுல் வஸ்ஸான் பேசுகையில், “அனைவரும் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகிவிட்டனர். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும், இந்திய அணி தான் இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என முழுமையாக நம்புகின்றனர். இதனால் இந்திய அணி மீது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அதிகமான எதிர்பார்புகள் வைத்துள்ளனர். என்னை பொறுத்தவரையில் ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள வேண்டும். எதிர்பார்ப்புகள் எப்போதும் பெரும் ஏமாற்றத்தையே கொடுக்கும். கடந்த 13 வருடங்களாக இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்து வருகிறது. எனவே ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வதே நல்லது. என்னை பொறுத்தவரையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் அதிகமான வாய்ப்பு இல்லை என்பதே எனது கருத்து. வெற்றி, தோல்விகளை போட்டிகள் நடைபெறும் ஆடுகளத்தின் தன்மையே தீர்மானிக்கும். 5 வருடங்களுக்கு பிறகு ஆசிய கோப்பையை கைப்பற்றி இந்திய அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியின் அனைத்து முயற்சிகளுக்கும் தற்போது தான் விடை கிடைத்து வருகிறது. இந்திய அணி உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *