ஐபிஎல் தொடர்ல நீங்க நம்பர் 1 கேப்டனா இருக்கலாம்... ஆனா உண்மையான பிரச்சனையே இனி தான் இருக்கு; ரோஹித் சர்மாவை எச்சரித்த கவுதம் கம்பீர் !! 1
ஐபிஎல் தொடர்ல நீங்க நம்பர் 1 கேப்டனா இருக்கலாம்… ஆனா உண்மையான பிரச்சனையே இனி தான் இருக்கு; ரோஹித் சர்மாவை எச்சரித்த கவுதம் கம்பீர்

எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா உண்மையான சவாலை எதிர்கொள்ள உள்ளதாக முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற 50 ஓவர் போட்டிகளுக்கான ஆசிய கோப்பை தொடரை கெத்தாக கைப்பற்ற இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதன்பின் இந்த மாத இறுதியில் துவங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

ஐபிஎல் தொடர்ல நீங்க நம்பர் 1 கேப்டனா இருக்கலாம்... ஆனா உண்மையான பிரச்சனையே இனி தான் இருக்கு; ரோஹித் சர்மாவை எச்சரித்த கவுதம் கம்பீர் !! 2

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற இருப்பதால், இந்திய அணி எப்படியாவது இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என விரும்பும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர், இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், எதிர்வரும் உலகக்கோப்பை தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடர்ல நீங்க நம்பர் 1 கேப்டனா இருக்கலாம்... ஆனா உண்மையான பிரச்சனையே இனி தான் இருக்கு; ரோஹித் சர்மாவை எச்சரித்த கவுதம் கம்பீர் !! 3

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “ரோஹித் சர்மா மிக சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் ஐபிஎல் தொடரில் 5 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். பல வீரர்களால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. ஆனால் ரோஹித் சர்மா உண்மையான சவாலை அடுத்த 15 தினங்களில் சந்திக்க உள்ளார். உலகக்கோப்பை தொடர் மற்ற அனைத்து தொடர்களையும் விட சவாலான தொடர். 15 முதல் 18 சிறந்த வீரர்களை தனது அணியில் வைத்திருக்கும் ரோஹித் சர்மா, ஒருவேளை உலகக்கோப்பை தொடரில் சொதப்பிவிட்டால் அவர் கடும் விமர்ச்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சொதப்பிவிட்டால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீதும் கேள்வி எழும். இதற்கு முன் விராட் கோலி, ராகுல் டிராவிட் போன்ற வீரர்களும் இந்த விமர்சனங்களையும், கேள்விகளையும் எதிர்கொண்டுள்ளனர். எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சொதப்பினால் அதற்கு ரோஹித் சர்மாவே பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும், ஏனவே ரோஹித் சர்மா கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதே வேளையில் இந்திய அணி இறுதி போட்டி வரை தகுதி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *