ஆஸ்திரேலியாவுக்கு அவ்வளவு சீன் கிடையாது… உலகக்கோப்பை தொடரில் இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்; மைக்கெல் வான் கணிப்பு
உலகக்கோப்பை தொடரில் எந்த எந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கெல் வான் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் உலகக்கோப்பை தொடருக்காக தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன. மறுபுறம் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் உலகக்கோப்பை தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? எந்த எந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள்..? எந்த எந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்..? என்பது குறித்தான தங்களது கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போன முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கெல் வானும், உலகக்கோப்பை தொடரில் எந்த எந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மைக்கெல் வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “உலகக்கோப்பை தொடருக்காக நான் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளேன். என்னை பொறுத்தவரையில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்” என்று தெரிவித்தார்.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கே வாய்ப்பு இல்லை மைக்கெல் வான் தெரிவித்துள்ளது ஆச்சரியமான விசயமாகவே உள்ளது.