உண்மைய சொல்லி தான ஆகனும்... இங்கிலாந்து இல்லை,  சாம்பியன் பட்டம் வெல்ல போவது இந்த டீம் தான்; ஸ்டூவர்ட் பிராட் ஆரூடம் !! 1
உண்மைய சொல்லி தான ஆகனும்… இங்கிலாந்து இல்லை,  சாம்பியன் பட்டம் வெல்ல போவது இந்த டீம் தான்; ஸ்டூவர்ட் பிராட் ஆரூடம்

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணி எது என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இங்கிலாந்து வீரரான ஸ்டூவர்ட் பிராட் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 58 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

உண்மைய சொல்லி தான ஆகனும்... இங்கிலாந்து இல்லை,  சாம்பியன் பட்டம் வெல்ல போவது இந்த டீம் தான்; ஸ்டூவர்ட் பிராட் ஆரூடம் !! 2

உலகக்கோப்பை தொடர் கிரிக்கெட் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள் இந்நாள் வீரர்கள் என பலரும் உலகக்கோப்பை தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இங்கிலாந்து வீரரான ஸ்டூவர்ட் பிராட், உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி எது என்பது குறித்தான தனது கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மைய சொல்லி தான ஆகனும்... இங்கிலாந்து இல்லை,  சாம்பியன் பட்டம் வெல்ல போவது இந்த டீம் தான்; ஸ்டூவர்ட் பிராட் ஆரூடம் !! 3

இது குறித்து ஸ்டூவர்ட் பிராட் பேசுகையில், “இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொள்வது மிக கடினம். சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றால் அதற்காக இங்கிலாந்து அணி மிக கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்படும், என்னை பொறுத்தவரையில் இந்திய அணியே இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் என கருதுகிறேன். இந்திய அணி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயமாக இந்திய அணியை கட்டுப்படுத்துவது சாதரண விசயமாக இருக்காது. எந்த அணியாலும் இந்திய அணியை கட்டுப்படுத்த முடியாது. உலகக்கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற இருப்பதும், இந்திய அணி தற்போது தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதும் அந்த அணிக்கு சாதகமானதாக அமையும். இந்திய அணியும், இங்கிலாந்து அணியுமே இறுதி போட்டிக்கு தகுதி பெறும், இதில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *