எழுதி வச்சுக்கங்க... உலகக்கோப்பையை வெல்ல போவது இந்த நான்கு டீமில் ஒரு டீம் தான்; ரவி சாஸ்திரி சொல்கிறார் !! 1
எழுதி வச்சுக்கங்க… உலகக்கோப்பையை வெல்ல போவது இந்த நான்கு டீமில் ஒரு டீம் தான்; ரவி சாஸ்திரி சொல்கிறார்

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணிகள் எது என்பது குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.

உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தங்களை தீவிரமாக தயார்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் எந்த எந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்..? எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

எழுதி வச்சுக்கங்க... உலகக்கோப்பையை வெல்ல போவது இந்த நான்கு டீமில் ஒரு டீம் தான்; ரவி சாஸ்திரி சொல்கிறார் !! 2

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரியும், உலகக்கோப்பை தொடரில், இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்று  தெரிவித்தார். நான்காவதாக ஒரு அணியை தேர்வு செய்வது மட்டுமே கடினமாக உள்ளது. நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் ஒன்று நான்காவதாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ரவி சாஸ்திரி, உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

எழுதி வச்சுக்கங்க... உலகக்கோப்பையை வெல்ல போவது இந்த நான்கு டீமில் ஒரு டீம் தான்; ரவி சாஸ்திரி சொல்கிறார் !! 3

இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என கருதுகிறேன். இந்தியாவின் பெரும்பாலான ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *