இது வெறும் ட்ரைலர் தான்… பயிற்சி போட்டியிலேயே பட்டைய கிளப்பிய இந்திய அணி ; அபார வெற்றி !!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதியது. துபாய் ஐசிசி., மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜேசன் […]