இந்தியாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் பத்தாவது தொடரில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றதால் மும்பை அணிக்கு வாழ்த்து கூறினார் WWE சாம்பியன் மற்றும் தற்போதைய சிஇஓ ட்ரிபிள் எச்.
மூன்றாவது முறையாக ஐபில் தொடரை வெல்லும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு பரிசளித்தார் ட்ரிபிள் எச்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து, பரிசு வந்து கொண்டு இருக்கிறது என பதிவிட்டிருந்தார்.
Congratulations, @mipaltan. @WWE has something headed your way! @WWEIndia https://t.co/Isjf4gmh1T
— Triple H (@TripleH) May 22, 2017
த்ரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்:
இறுதி போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்தார். தொடக்கமே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்திவ் பட்டேல் மற்றும் சிம்மன்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ரோஹித் சர்மா மற்றும் அம்பதி ராயுடு பொறுமையாக விளையாடிவந்தனர். ஆனால், 79 ரன்களுக்கு 7 விக்கெட் எடுத்து 100 ரன் கூட அடிக்க மாட்டார்கள் என நினைத்தபோது, க்ருனால் பாண்டியா மற்றும் மிட்சல் ஜான்சன் ஜோடி 50 ரன் அடித்தது.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய க்ருனால் பாண்டியா 38 பந்துகளில் 47 அடித்து அவுட் ஆக, 20 ஓவர் முடிவில் 129 ரன் அடித்தது மும்பை.
அசால்ட்டா அடிக்கலாம் என்று நினைத்த புனே அணியின் ரசிகர்களுக்கு நெஞ்சு வலியை வர வைத்தார் திருப்பதி. அவர் சொற்ப ரன்னில் அவுட் ஆக, அடுத்து வந்த ஸ்மித் மற்றும் ரஹானே ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்தது. கடைசி 5 ஓவரில் 47 தேவை பட்டது மும்பை அணிக்கு. தோனியின் விக்கெட்டை பும்ரா எடுக்க மும்பையின் வெற்றி கொஞ்சம் உறுதியானது. கடைசி 2 ஓவரில் 21 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது புனே அணி. 19வது ஓவரில் முதல் 5 பந்துகளில் 4 ரன் மட்டுமே கொடுத்திருந்தார் பும்ரா,ஆனால் கடைசி பந்தில் சிக்ஸர் விறுவிறுப்பை ஏற்படுத்தினார்.
கடைசி ஓவரில் 11 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி ஓவரை வீச வந்தார் மிட்சல் ஜான்சன். முதல் பந்தில் பவுண்டரியை விளாசிய மனோஜ் திவாரி, அடுத்த பந்தில் அவுட் ஆனார். அடுத்த பந்தில் ஸ்டீவ் ஸ்மித்தும் அவுட் ஆக போட்டி இன்னும் விறுவிறுப்பான கட்டத்திற்கு சென்றது. கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய டேனியல் கிறிஸ்டின் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் 3வது முறையாக ஐபில் கோப்பையை வென்று அசத்தியது.