புரோ கபடி லீக் தொடரின் ஐந்தாவது சீசன்(2017) கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியானா ஆகிய நான்கு புதிய அணிகளும் அறிமுகம் ஆகின.
இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.
இதல், மொத்தம் 22 போட்டிகளில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றிப் பெற்று, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. 14 போட்டியில் தோல்வியும், இரண்டு போட்டியை டிராவும் செய்தது. இதனால் 46 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் கடைசி இடத்தையே தமிழ் தலைவாஸ் பிடித்தது.
இந்நிலையில், ‘ஏ’ பிரிவில் குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணியும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும், புனேரி பால்டன் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
‘பி’ பிரிவில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும், யு.பி.யோதா அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.
இந்தநிலையில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. இது தமிழ் தலைவாஸ் அணியின் கடைசி லீக் போட்டியாகும். இதுவரை விளையாடிய 21 போட்டிகளில், 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி. அடுத்த சுற்றுக்கு தகுதிபெரும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.
இப்போட்டியில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி, 29-12 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. அதைத்தொடர்ந்து நடந்த இராண்டாம் பாதி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியின் கை ஓங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் 40-37 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது. பாட்னா அணி கேப்டன் பிரதீப் நர்வால் 20 ரெய்டு புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் அஜய் தாகூர் 14 ரெய்டு புள்ளிகளும் எடுத்தனர்.
பின்னர் நடந்த மற்றொரு லீக் போட்டியில் புனேரி பால்டன் – யூ மும்பா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 43-24 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. புனே அணியின் தீபக் ஹூடா அதிகபட்சமாக 15 ரெய்டு புள்ளிகள் எடுத்தார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் 34-31 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், புனேரி அணி கேப்டன் தீபக் ஹூடா அதிகபட்சமாக 10 தொடுபுள்ளிகளும் எடுத்தார்.
முன்னதாக நடந்த மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் – உ.பி. யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 38-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ரோஹித் குமார் அதிகபட்சமாக 12 தொடுபுள்ளிகள் எடுத்தார்.
இன்றைய லீக் பிரிவு ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவு புள்ளிப்பட்டியலில் புனேரி பால்டன் அணி 73 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தபாங் டெல்லி அணி 38 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் நீடிக்கின்றன. ‘பீ’ பிரிவு புள்ளிப்பட்டியலில் உ.பி. யோத்தா அணி 60 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், பெங்களூரு புல்ஸ் அணி 49 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
நாளை ஓய்வு தினம். நாளை மறுநாள் நடைபெறும் லீக் போட்டிகளில் புனேரி பால்டன் – அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூரு புல்ஸ் – உ.பி. யோத்தா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.