உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் தோனியின் இடம் உறுதியாகிவிட்டதையடுத்து அவரது தற்போதைய பேட்டிங், அணியில் அவரது இடம் குறித்த கேள்விகள், ஐயங்கள் ஆகியவை குறித்து அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விரிவாகப் பேசியுள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு எம்.எஸ்.கே. பிரசாத் அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். அதில் குறிப்பாக இந்திய அணியில் நுழைய ஒரு வீரருக்கு என்ன குணாம்சங்கள் தேவை என்ற கேள்விக்கு அவர் அச்சமற்ற தன்மையை முதன்மையாகக் குறிப்பிட்டார்.

அந்த வகையில் தோனி தற்போது அணிக்கு எப்படி முக்கியம் என்று பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், “கடந்த இரண்டு தொடர்களில், ஆஸ்திரேலியா, மற்றும் நியூஸிலாந்தில் மாஹி (தோனி) ஆடிய விதம் அவரிடமிருந்து தெளிவான செய்தியை அறிவிப்பது போல் இருந்தது.  அவர் தன் பாணி ஆட்டத்துக்குத் திரும்பியுள்ளார், அதாவது இயல்பான தன் ஆட்டத்துக்குத் தான் திரும்பியதை அவர் அறிவுறுத்தினார். இந்த தோனியைத்தான் நாம் அறிவோம்.

அவர் தனது முந்தைய அச்சமற்ற அதிரடியைக் காட்டினாலே போதும் நாம் மகிழ்ச்சியடைவோம். அவரிடமுள்ள ஆக்ரோஷ சக்தியை அவர் வெளிப்படுத்தினாலே போதும். சில வேளைகளில் ஆட்டத்தின் கால நேரம் போதாமையினால் அவர் ரன்கள் குறைவாக எடுக்கிறார். இப்போது தொடர்ந்து அவர் ஆடும்போது அவர் டச்சை நாம் பார்க்கிறோம்.

 

இவரது இந்தப் பதிலையடுத்து கிரிக்  இன்போ கேட்கும்போது,  ‘லார்ட்ஸ் ஒருநாள் போட்டியில் தோனி மந்தமாக ஆடிய போது ரசிகர்கள் அவரைக் கேலி செய்தனர். அதற்கு பிற்பாடு விளக்கமளித்த விராட் கோலி, ஆட்டத்தை தோனி கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது என்று விளக்கமளித்தார். தோனியின் பேட்டிங் அப்பொது சற்றே திணறலாக அமைந்தது, அப்போது அணியின் தோனியின் இடம் குறித்த கவலைகள் இருந்ததா?’ என்று ஒரு கேள்வியைப் போட்டார்.

இதற்குப் பதில் அளித்த பிரசாத், “தோனியைப் பொறுத்தவரை 2 அம்சங்கள் முக்கியம், ஒன்று அவரது விக்கெட் கீப்பிங், இன்னொன்று அவரது பேட்டிங். அவரது விக்கெட் கீப்பிங் குறித்த் எந்த வித ஐயங்களும் எங்களுக்கு இல்லை. பேட்டிங்கைப்பொறுத்தவரை அவரது பார்ம்  குறித்து கவலையடைந்தோம். ஆனால் அதே வேளையில் அவர் அதிகம் ஆடினால் அவர் பார்முக்கு வருவார் என்று நம்பினோம் (இதே அளவுகோல் மற்ற வீரர்களுக்கு உண்டா?). எந்த ஒரு வீரரின் கரியரிலும் இது போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்யும்.

அவர் இப்போதும் மேட்ச் வின்னர்தான். உலகக்கோப்பையில் அவர்தான் மிக முக்கியமான வீரராக இருப்பார். விக்கெட் கீப்பிங்காகட்டும்., கோலிக்கு ஆலோசனை வழங்குவதிலாகட்டும், களத்தில் இளம் வீரர்களை வழிநடத்துவதிலாகட்டும் அவர் உலகக்கோப்பையில் முக்கியமான வீரர்.

உலகக்கோப்பைதான் அவர் இந்தியாவுக்காக கடைசியாக ஆடும் தொடரா என்று கேட்டால், நாங்கள் அது குறித்து இன்னும் விவாதிக்கவில்லை, சிந்திக்கவில்லை என்றுதான் கூற முடியும்.  உ.கோப்பை போன்ற பெரிய தொடருக்கு முன்னால் இதை இழுத்து கவனச்சிதறல் ஏற்படுத்துவது நல்லதல்ல. ஏனெனில் உலகக்கோப்பைக்காக தயார் செய்து கொள்வதில் அனைத்து ஆற்றல்களும் திருப்பி விடப்பட்டுள்ளன” இவ்வாறு கூறினார் எம்.எஸ்.கே. பிரசாத். • SHARE

  விவரம் காண

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

  அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

  புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...