ரோகித் சர்மாவிற்கு முதல் குழந்தை: ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் இந்தியா செல்கிறார் 1

இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு தற்போது முதல் குழந்தை பிறக்க உள்ளதால் தற்போது அரசியலில் தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அவர் இந்தியா திரும்புகிறார். முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடியவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஆடவில்லை. தற்போது அவருக்கும் அவரது மனைவிக்கும் முதல் குழந்தை இந்தியாவில் பிறக்க உள்ளது இதன் காரணமாக அவர் இந்தியா செல்லவுள்ளார் மேலும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டார் எனவும் தெரியவந்துள்ளது.பெர்த் டெஸ்ட் போட்டியில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சில் ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயனிடம் 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்திய அணி அடிலெய்ட் டெஸ்ட் வெற்றி சாதகப் பலன்களை தக்க வைக்காமல் ஆஸி. அணியிடம் சரணடைந்தது.

ரோகித் சர்மாவிற்கு முதல் குழந்தை: ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் இந்தியா செல்கிறார் 2

இதனையடுத்து விராட் கோலி கூறியதாவது:

”ஓர் அணியாக ஆங்காங்கே நன்றாக விளையாடினோம். எங்களை விட ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங்கில் நன்றாக ஆடினர். இந்தப் பிட்சில் அவர்கள் முதல் இன்னிங்ஸில் 330 ரன்களை (326) எடுக்க விட்டது தவறானது, இது மிக அதிகம். வெற்றி பெற அவர்களுக்குத்தான் தகுதி உள்ளது.

நாம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அவர்கள் ஓய்வு ஒழிச்சலில்லாமல் தொடர்ந்து நமக்கு நெருக்கடி கொடுத்தனர். பவுலர்கள் ஓர் அணியாகத் திரண்டு பிரமாதமாக வீசியது மகிழ்ச்சியளிக்கிறது. பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தியதைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் இத்தகைய பவுலிங் அணியை நாம் கட்டமைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பிட்சைப் பார்த்த போது 4 வேகப்பந்து வீச்சாளர்கள் என்று முடிவெடுத்தோம், ஜடேஜாவைப் பற்றி யொசிக்கவில்லை. ஸ்பின்னர் ஒருவர் தேவை என்று பரிசீலிக்க வேண்டியதில்லை என்று நினைத்தோம். நேதன் லயன் உண்மையில் மிகச்சிறப்பாக வீசினார். இந்தப் பிட்சிலும் அவர் தனக்கேற்ப எப்படி வீச வேண்டுமோ அப்படி வீசி பிரச்சினைகள் கொடுத்தார்.

ரோகித் சர்மாவிற்கு முதல் குழந்தை: ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் இந்தியா செல்கிறார் 3

என்னுடைய சதம் வெற்றிக்குப் பங்களிப்பு செய்யவில்லை எனும்போது அதை நான் தரநிலைப்படுத்த விரும்பவில்லை. எனவே விரும்பத்தகுந்த ரிசல்டை அளிக்கவில்லை எனும்போது அதைப் பற்றி பேசிப் பயனில்லை. மெல்போர்ன், பாக்சிங் டே டெஸ்ட் விசேஷமானது, மைதானம் நிரம்பி வழியும் எனவே அடுத்த டெஸ்ட்டில் கவனம் செலுத்துவோம்.

எனக்குக் கொடுத்த அவுட் தீர்ப்பு களத்தில் முடிந்து விட்டது, அதைப்பற்றி பேச விருப்பமில்லை, ஒன்றுமில்லை”.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.இந்நிலையில், 3 மற்றும் 4-ஆவது டெஸ்ட் போட்டிகளுக்கான 19 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடித்திருந்த இளம் நட்சத்திர வீரர் பிருத்வி ஷா காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

ரோகித் சர்மாவிற்கு முதல் குழந்தை: ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் இந்தியா செல்கிறார் 4

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், பார்திவ் படேல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹார்திக் பாண்டியா, மயங்க் அகர்வால்.

Leave a comment

Your email address will not be published.