இந்திய அணிக்கு சாதனை, நியூசிலாந்துக்கு வேதனை.. 168 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் ரெக்கார்ட் படைத்த இந்தியா!

168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பேட்டிங் செய்வதற்கு முடிவு செய்தார். இந்திய அணிக்கு ராகுல் திரிப்பாதி 44(22) ரன்கள் அடித்து, அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். ஷுப்மன் கில் அரைசதம் கடந்தபின், அசுர வேகத்தில் அதிரடியை துவங்கினார். நடுவில் சூரியகுமார் யாதவ் 24(13) ரன்கள், ஹர்திக் பாண்டியா […]