ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கான வங்கதேசம் அணி

சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கான அணியை தேர்ந்தெடுத்து வெளியிட்டது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இந்த தொடர் ஒருநாள் போட்டியை போல் 50- ஓவர் கொண்ட போட்டி ஆகும். இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பியை 11 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேச கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக மஷ்ரபே மொர்டாசா செயல்பட உள்ளார். வங்கதேசம் அணி A பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுடன் இருக்கிறது. சாம்பியன்ஸ் ட்ராப்பியின் முதல் போட்டி இங்கிலாந்தும் வங்கதேசமும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. […]