எனக்கெல்லாம் பும்ரா பவுலிங் பேபி பவுலிங் மாதிரி; சாஹின் அப்ரிடி அளவுக்கு துளியும் வரமுடியாது – முன்னாள் பாகிஸ்தான் வீரர் சவடால் பேச்சு!

பும்ரா எந்தவகையிலும் சாஹின் அப்ரிடிக்கு நிகராக வரமுடியாது என பேசியுள்ளார் அப்துல் ரசாக். சமகால கிரிக்கெட்டில் சிறந்த பவுலர்களாக பார்க்கப்பட்டு வருபவர்கள், பாகிஸ்தானை சேர்ந்த சாஹின் அப்ரிடி மற்றும் இந்தியாவை சேர்ந்த இந்த ஜஸ்பிரித் பும்ரா. இருவரும் மூன்று வித போட்டிகளிலும் பந்துவீச்சின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருக்கின்றனர். சமீபகாலமாக இருவருமே அவ்வபோது காயம் ஏற்பட்டு சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. பும்ரா செப்டம்பர் மாதத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் காயம் காரணமாக […]