செய்யக்கூடாததை செய்து அப்பட்டமாக மாட்டிக்கொண்ட ஜடேஜா; வார்னிங் கொடுத்து அபராதம் விதித்த ஐசிசி!

முறையான அனுமதி இல்லாமல், கையில் வலி நிவாரணி பூசியதற்காக ஜடேஜாவிற்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி. பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி துவங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்சில் அபாரமாக செயல்பட்ட ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா, சுமார் ஆறு மாத காலம் காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் […]