என்னது எங்களுக்கு தகுந்த மாதிரி பிட்ச் ரெடி பண்ணி தான் ஜெயிக்கிறோமா? – நியூசிலாந்து அணியின் குற்றச்சாட்டுக்கு இந்திய பவுலிங் கோச் பதிலடி!

குறைந்த ஸ்கொர் அடிக்கும்படியான பிட்ச்சை தயார் செய்யச்சொல்லி இந்திய அணி வற்புறுத்துகிறதா? என்கிற கேள்விக்கு பரஸ் மாம்பரே பதில் கொடுத்திருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டி லக்னோ மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்ததால் இரு அணிகளும் 4 ஸ்பின் பவுலர்களை பயன்படுத்தினர். 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியால் அதிரடியாக விளையாடமுடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. 20 ஓவர்களில் வெறும் […]