வீடியோ : போட்டி முடிந்தபின் இலங்கை வீரர்களுக்கு அறிவுரை கூறும் தோனி

இலங்கை வீரர்களுக்கு தோனி பேட்டிங் ஆலோசனை கூறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான  டி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி  முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. […]