முதல் டெஸ்டில் இந்திய அணியின் பவுலிங் சுமார்; உண்மையிலேயே எங்களது தோல்விக்கு காரணம் இதுதான் – ப்ரெஸ் மீட்டில் வெளிப்படையாக பேசிய ஆஸி., கோச்!

முதல் டெஸ்டில் நாங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் இந்திய அணியின் பவுலிங் இல்லை, எங்களுடைய அலட்சியமான பேட்டிங் என்று பேசியுள்ளார் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஷான் டெய்ட். பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இம்முறை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி மூன்றாம் நாள் முடிவிற்குள்ளேயே ஆஸ்திரேலியா அணியை சுருட்டி விட்டது. இறுதியாக இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியையும் பதிவு செய்தது. […]