புரோ கபடி ‘லீக்’கில் ஹாட்ரிக் சாம்பியன்: பாட்னா அணிக்கு ரூ.3 கோடி பரிசு

புரோ கபடி லீக் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது. நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில் அந்த அணி 55-38 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ‘லீக்’ ஆட்டத்தில் 2 முறை தோற்றதற்கு அந்த அணி சரியான பதிலடி கொடுத்தது. […]