உணர்ச்சிகரமான அணித்தேர்வு சமயத்தில் ராகுல், தவண் நட்பு உதவுகிறது: முரளி விஜய் பேட்டி

அணித்தேர்வு போன்ற உணர்ச்சிகரக் காலக்கட்டங்களில் லோகேஷ் ராகுல், ஷிகர் தவண் ஆகியோருடனான நட்பு தனக்கு உதவியதாக இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் தெரிவித்தார். “நாங்கள் மூவரும் (தவண், ராகுல், விஜய்) களத்துக்கு வெளியேயும் சிறந்த நண்பர்கள். இதனால் அணித்தேர்வு சமயத்தில் இந்த நட்பு உதவியது. ரெகுலராக தொடக்கத்தில் களமிறங்கும் ஒரு வீரர் அணியிலிருந்து நீக்கப்படும் போது அது நிச்சயம் நிலைதடுமாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துகிறது. நாங்கள் மூவரும் களத்துக்கு வெளியே சிறந்த நண்பர்களாக இருப்பதால் […]